போர் கப்பல் மாஸ்க்வா மூழ்கியதற்கு... உக்ரைனுக்கு அமெரிக்க உளவுத்துறை உதவி.
ரஷ்யாவின் சோவியத் கால போர் கப்பலான மாஸ்க்வாவை உக்ரைன் ஏவுகணைகள் தாக்கி அழிக்க அமெரிக்க உளவுத்துறை உதவியதாக அந்த நாட்டின் அரசு அதிகாரி தகவல் தெரிவித்துள்ளார்.
கருங்கடலின் ராஜாவாக கருத்தப்பட்டு வந்த ரஷ்யாவின் சோவியத் கால போர் கப்பல் மாஸ்க்வாவை கடந்த ஏப்ரல் மாதம் 14ம் திகதி உக்ரைனின் இரண்டு நெப்டியூன் கப்பல் எதிர்ப்பு ஏவுகணைகள் தாக்கி அழித்தன.
உக்ரைனின் இந்த தாக்குதலை எற்றுக்கொள்ளாத ரஷ்யா, கப்பலில் சேமித்து வைக்கப்பட்டு இருந்த வெடி மருந்து வெடித்ததில் தான் விபத்து எற்பட்டு கப்பல் மூழ்கியதாக தெரிவித்து வருகிறது.
இந்த நிலையில், கருங்கடல் பகுதியில் ரஷ்யா முக்கிய போர் கப்பலான மாஸ்க்வாவை நீரில் மூழ்கடிப்பதற்கு அமெரிக்க உளவுத்துறை உதவியதாக அமெரிக்காவின் அரசு அதிகாரி ஒருவர் NBC தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் தகவல் தெரிவித்துள்ளார்.
அதில் ரஷ்யாவின் போர் கப்பலான மாஸ்க்வாவை அடையாளம் கண்டு அதனை உறுதிப்படுத்தவும், பின் அதன் துல்லியமான இருப்பிடத்தை உக்ரைனிய படைகளுக்கு அறிவிப்பதிலும் அமெரிக்க உளவுத்துறை உதவியதகாக தெரிவித்துள்ளார்.
ஆனால் உக்ரைன் படைகள் மாஸ்க்வா கப்பலை குறிவைத்து தாக்க திட்டமிட்டது அமெரிக்காவிற்கு தெரியாதும் என்றும், சோவியத் கால போர் கப்பலை அழிப்பதில் அமெரிக்க வேறு எந்த உதவிகளையும் செய்யவில்லை எனவும் தெரிவித்துள்ளார்.
கூடுதல் செய்திகளுக்கு: புடினின் விருப்பம் இதுதான்... வெளிப்படையாக கூறிய ரஷ்யாவின் நட்பு நாட்டின் ஜனாதிபதி
மேலும் இதற்கு முன்னதாக, ரஷ்யாவின் போர் கப்பல்களில் இருந்து வரும் தாக்குதல்களை உக்ரைன் எதிர்க்கவும் அமெரிக்காவின் கடல்சார் உளவுத்துறை உதவியதாகவும் NBC தொலைக்காட்சிக்கு அமெரிக்க அதிகாரி தகவல் தெரிவித்துள்ளார்.