புடினின் விருப்பம் இதுதான்... வெளிப்படையாக கூறிய ரஷ்யாவின் நட்பு நாட்டின் ஜனாதிபதி
ரஷ்ய அதிபர் புடினின் விருப்பம் குறித்து ரஷ்யாவின் நட்பு நாடான பெலராஸின் ஜனாதிபதி அலெக்சாண்டர் லுகாஷென்கோ வெளிப்படுத்தியுள்ளார்.
பிப்ரவரி 24ம் திகதி முதல் உக்ரைன் மீது படையெடுத்து வரும் ரஷ்யா, மரியுபோலில் உள்ள எஃகு ஆலை மீது தீவிரமாக தாக்குதல் நடத்தி வருகிறது.
இதனிடையே தனியார் ஊடகம் ஒன்றிற்கு போட்டியளித்த பெலாரஸ் ஜனாதிபதி அலெக்சாண்டர் லுகாஷென்கோ, ராணுவ நடவடிக்கையை தொடங்க ரஷ்யாவை உக்ரைன் தூண்டியதாக கூறினார்.
பெலராஸ் அமைதியை தான் விரும்புகிறது. எந்தவிதமான போரையும் நாங்கள் ஏற்கமாட்டோம்.
மார்பில் பலமாக தாக்கிய பந்து! அலறி துடித்த வீரர்... ரசிகர்களை பதறவைத்த வீடியோ
உக்ரைனில் அணு ஆயுதம் பயன்படுத்துவதை நாங்கள் ஏற்கமாட்டோம், ஏனென்றால் நாங்கள் அவர்களுக்கு அருகில் இருக்கிறோம் என கூறினார்.
மேலும், புடின் உக்ரைனை கைப்பற்றமாட்டார். அவர் நட்பான ஒருங்கிணைந்த உக்ரைனை விரும்புகிறார். நான் அவரை ஆதரிக்கிறேன். அதன் தான் எனது நிலைப்பாடும் என அலெக்சாண்டர் லுகாஷென்கோ தெரிவித்துள்ளார்.