யூரோ மில்லியன் ஜாக்பாட்: பிரித்தானியர் ஒருவருக்கு அடித்துள்ள £55 மில்லியன் அதிர்ஷ்டம்
பிரித்தானியாவில் லொட்டரி டிக்கெட் வைத்து இருக்கும் நபர் ஒருவர் சுமார் £55 மில்லியன் பவுண்ட் மதிப்பிலான ஜாக்பாட்டை வெற்றி பெற்றுள்ளார்.
£55 மில்லியன் பவுண்டு ஜாக்பாட்
யூரோ மில்லியன் ஜாக்பாட்டில் செவ்வாய் கிழமை நடந்த டிராவில் லொட்டரி டிக்கெட் வைத்து இருக்கும் பிரித்தானியாவை சேர்ந்த நபர் ஒருவர் சுமார் £55 மில்லியன் பவுண்ட் மதிப்பிலான ஜாக்பாட்டை வெற்றி பெற்றுள்ளார்.
வெற்றி எண்கள் முறையே 11, 17,28,32 மற்றும் 35 என்றும், அதிர்ஷ்ட நட்சத்திரங்கள் 05 மற்றும் 06 என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த மாதத்தின் தொடக்கத்தில் லொட்டரி டிக்கெட் வைத்து இருந்த நபர் ஒருவர் யூரோ மில்லியன்ஸ் டிராவில் கிட்டத்தட்ட £117.7 மில்லியன் பவுண்ட் மதிப்புள்ள ஜாக்பாட்டை வெற்றி பெற்று இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
டிக்கெட்டுகளை உடனடியாக சரிபார்க்க அறிவுறுத்தல்
இந்நிலையில் பிரித்தானியாவில் லொட்டரி டிக்கெட்டுகளை வைத்து இருக்கும் போட்டியாளர்கள் உடனடியாக தங்களது டிக்கெட்டுகளை சரிபார்க்க நேஷனல் லொட்டரியின் மூத்த வெற்றியாளர்களின் ஆலோசகர் ஆண்டி கார்ட்டர் கேட்டுக் கொண்டுள்ளார்.
இன்றிரவு நடைபெற்ற ஜாக்பாட்டில் தங்களை வெற்றியாளர்கள் என யாரும் கருதினால் உடனடியாக எங்களை தொடர்பு கொள்ளுமாறு வலியுறுத்த படுவதாகவும் ஆண்டி கார்ட்டர் கேட்டுக் கொண்டுள்ளார்.
அத்துடன் இந்த லொட்டரி டிக்கெட் விற்பனை மூலம் ஒவ்வொரு வாரமும் 30 மில்லியன் பவுண்டுகள் நாட்டின் நற்செயலுக்காக திரட்டப்பட்டு வருவதாக தெரிவித்துள்ளார்.
இதற்கிடையில் சண்டே டைம்ஸ் வெளியிட்ட செல்வந்தர்கள் பட்டியலின் அடிப்படையில் தற்போதைய லொட்டரி டிக்கெட் வெற்றியாளர் இங்கிலாந்து கால்பந்து வீரர் ஹாரி கேனை(£51m) விட அதிக செல்வந்தராக மாறியுள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |