பிரித்தானியாவின் M1 நெடுஞ்சாலையில் கோர விபத்து: இரண்டு இளைஞர்கள் உயிரிழப்பு
பிரித்தானியாவில் நடந்த சாலை விபத்தில் 20 வயதுடைய இரண்டு இளைஞர்கள் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.
சாலை விபத்து
புதன்கிழமை இரவு சவுத் யார்க்ஷயர் காவல்துறைக்கு உட்பட்ட M1 நெடுஞ்சாலையில் கோர கார் விபத்து சம்பவம் ஒன்று அரங்கேறியது.
M1 நெடுஞ்சாலையில் தெற்கு நோக்கி செல்லும் சாலையில் இரவு சுமார் 11.36 மணியளவில் 37 மற்றும் 36 இணைப்புகளுக்கு இடையே இந்த கார் விபத்தானது ஏற்பட்டுள்ளது.

BMW செடான் கார் ஒன்று கட்டுப்பாட்டை இழந்து சாலையில் இருந்து விலகி மரத்தின் மீது மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.
இருவர் உயிரிழப்பு
இந்த சம்பவத்தில் ஓட்டுநரான 20 வயது இளைஞர் மற்றும் 20 வயது இளம் பெண் ஒருவர் என இருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டனர்.
இதையடுத்து சவுத் யார்க்ஷயர் பொலிஸார் விபத்து குறித்து விசாரணையை தொடங்கியுள்ளனர்.
மேலும் விபத்தில் உயிரிழந்தோர் குடும்பத்தினருக்கு சிறப்பு பொலிஸ் அதிகாரிகள் ஆதரவு அளித்து வருகின்றனர்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |