மனைவி மற்றும் மகளை கொலை செய்த கணவர்: பிரித்தானியாவில் சம்பவம்
மனைவி மற்றும் 12 வயது மகளை கொலை செய்த பீட்டர் நாஷ் என்ற கணவன்.
அடிவயிற்றில் குத்தப்பட்டதால் 12 வயது மகள் லூயிஸ் உயிரிழப்பு.
பிரித்தானியாவின் Suffolk-கில் உள்ள வீடு ஒன்றில் மனைவி மற்றும் 12 வயது மதிக்கதக்க பெண் குழந்தையை கொலை செய்ததாக கணவர் பீட்டர் நாஷ் மீது பொலிஸார் குற்றம் சாட்டியுள்ளனர்.
Suffolk பகுதியில் 44 வயதான ஜில்லு நாஷ் மற்றும் அவரது 12 வயது மகள் லூயிஸ் ஆகியோர் செப்டம்பர் 8 ஆம் தேதி Great Waldingfield-ல் உள்ள வீடு ஒன்றில் இறந்த நிலையில் சடலங்களாக கண்டெடுக்கப்பட்டனர்.
இவர்களுடன் 46 வயதுடைய அவரது கணவர் பீட்டர் நாஷ் என்பவரும் பலத்த காயங்களுடன் அங்கிருந்து மீட்கப்பட்டார்.
மேலும் அவர் காயங்கள் காரணமாக ஐந்து வாரங்கள் பொலிஸ் பாதுகாப்பின் கீழ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.
இந்நிலையில், பீட்டர் நாஷ் மீது இரண்டு கொலைக் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளதாக Suffolk காவல்துறை ஞாயிற்றுக்கிழமை தெரிவித்துள்ளது.
அக்டோபர் 7 ஆம் தேதி தொடங்கிய மரணம் தொடர்பான பொலிஸார் விசாரணையில், அந்த வீடு கணவன் மனைவியாக இருந்த ஜில்லு மற்றும் பீட்டர் நாஷ் ஆகியோரின் வீட்டு முகவரி என்றும், அந்த சொத்தில் அவர்களது 12 வயது மகள் லூயிஸுடன் வசித்ததாகவும் தெரியவந்துள்ளது.
மேலும் உள்துறை அலுவலக பிரேத பரிசோதனையில் ஜில்லு நாஷின் மரணத்திற்கு கழுத்தில் அழுத்தமும், மகள் லூயிஸ் அடிவயிற்றில் குத்தப்பட்ட காயத்தால் உயிரிழந்து இருப்பதாக கண்டறியப்பட்டுள்ளது.
கூடுதல் செய்திகளுக்கு: 140 ஆயிரம் டன் உணவு தானியம்: ஆசியா, ஆப்பிரிக்கா, ஐரோப்பா நோக்கி விரைந்த 4 சரக்கு கப்பல்கள்
கொலை குற்றம் சுமத்தப்பட்டுள்ள பீட்டர் நாஷ் பொலிஸ் காவலில் வைக்கப்பட்டுள்ளார், அவரை திங்களன்று ஐப்ஸ்விச் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் பொலிஸார் ஆஜர்படுத்தப்படுகிறார்.