பெண்ணுடன் வாக்குவாதம்...தேம்ஸ் நதியின் தண்ணீருக்குள் குதித்த நபர் உயிரிழப்பு!
கைது நடவடிக்கையின் போது தேம்ஸ் நதிக்குள் குதித்த நபர் உயிரிழப்பு.
இரண்டு மணிநேர போராட்டத்திற்கு பிறகு தண்ணீரில் இருந்து உடல் மீட்பு.
பிரித்தானியாவின் கிங்ஸ்டன் பாலத்தில் இருந்து தேம்ஸ் நதியின் தண்ணீருக்குள் குதித்த நபர் பரிதாபமாக உயிரிழந்து விட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
பிரித்தானியாவில் வெள்ளிக்கிழமை இரவு 10:30 மணியளவில் தென்மேற்கு லண்டனில் உள்ள கிங்ஸ்டன் பாலத்தில் வாய் தகராறில் ஆணும் பெண்ணும் ஈடுபட்டு இருந்தனர்.
அப்போது திருட்டு குற்றச்சாட்டுக்கு பிறகு ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த பொலிஸ் அதிகாரிகள் அந்த நபரை கைது செய்ய முற்பட்டனர். ஆனால் அந்த நபர் திடீரென கிங்ஸ்டன் பாலத்தில் இருந்து தேம்ஸ் நதியின் தண்ணீருக்குள் குதித்தார்.
Pic: @ih8mel
இதனை தொடர்ந்து தீயணைப்புப் படை, ஆர்என்எல்ஐ, பெருநகர காவல்துறையின் கடல் பிரிவு மற்றும் ஹெலிகாப்டர் ஆகியவற்றின் உதவுடன் தேடுதல் வேட்டை நடத்திய பின்னர் இரண்டு மணி நேரத்திற்குப் பிறகு அவரது உடல் தண்ணீரில் இருந்து மீட்கப்பட்டது.
இதையடுத்து, துணை மருத்துவர்கள் அவரை உயிர்ப்பிக்க முயன்றனர், ஆனால் இறுதியில் அவர் இறந்துவிட்டதாக அறிவித்தனர். பெயர் வெளியிடப்படாத 20 வயதிற்குட்பட்ட அந்த நபர் கைது செய்யப்படும் போது கைவிலங்கில் இல்லை என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
Bjanka Kadic/Alamy
கூடுதல் செய்திகளுக்கு: பல கோடிகளுக்கு ஏலத்தில் விற்கப்பட்ட பிரித்தானிய இளவரசி டயானாவின் கார்... வெளியாகியுள்ள அரிய புகைப்படங்கள்!
இதுத் தொடர்பாக துணை உதவி ஆணையர் லாரன்ஸ் டெய்லர் கூறியதாவது, எனது எண்ணங்களும், பெருநகர காவல் துறையின் எண்ணங்களும், இந்த சம்பவத்தைத் தொடர்ந்து பரிதாபமாக உயிரிழந்த நபரின் நண்பர்கள் மற்றும் குடும்பத்தினருடன் உள்ளன எனத் தெரிவித்தார்.