பிரான்சுக்கு சுற்றுலா சென்ற பிரித்தானியர்: சாலையோரம் நின்றவரை தேடி வந்த மரணம்
பிரித்தானியர் ஒருவர் பிரான்சுக்கு சுற்றுலா சென்றிருந்த நிலையில், சாலையோரமாக நின்றுகொண்டிருந்த அவர் மீது 50 அடி உயரத்துக்குக் குவிந்த பனி அவரது உயிரை பலிவாங்கிவிட்டது.
பிரான்சுக்கு சுற்றுலா சென்ற பிரித்தானியர்
27 வயது பிரித்தானியர் ஒருவர் பிரான்சுக்கு சுற்றுலா சென்றிருந்த நிலையில், வியாழக்கிழமையன்று சாலையோரமாக நின்றுகொண்டிருந்திருக்கிறார்.
அப்போது திடீரென ஏற்பட்ட பனிச்சரிவு ஏராளம் பனியை அள்ளிக்கொண்டுவர, அந்த இளைஞர் மீது 50 அடி உயரத்துக்கு பனி மூடியுள்ளது.
பொலிசார் இருவர் உட்பட ஐந்து பேர் உடனடியாக பனியை விலக்கி அவரை மீட்டு அருகிலுள்ள மருத்துவமனைக்குக் கொண்டு சென்றுள்ளார்கள்.
ஆனால், அவரது இதயமும் நுரையீரலும் செயலிழந்ததால் அவரைக் காப்பாற்ற முடியாமல் போயுள்ளது, அன்று மாலை அவர் உயிரிழந்துவிட்டார்.
பிரான்ஸ், இத்தாலி மற்றும் சுவிட்சர்லாந்து ஆகிய மூன்று நாடுகளிலும் வானிலை மோசமாக உள்ள நிலையில், வானிலை காரணமாக இதுவரை நான்கு பேர் உயிரிழந்துள்ளதாக ஊடகங்கள் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.