பிரித்தானியாவில் தங்கையின் வன்முறை காதலனை கொன்ற அண்ணன்: நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு
பிரித்தானியாவில் தங்கையின் வன்முறை காதலனை கிறிஸ்துமஸ் தின கொண்டாட்டத்தின் போது கொன்ற அண்ணன் ஆடம் ஜென்கின்ஸ்-க்கு 8 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
சகோதரியின் காதலன் கொலை
பிரித்தானியாவின் சுந்தர்லேண்ட் பகுதியில் உள்ள நியூபாட்டிலில் கடந்த 2021ம் ஆண்டு டிசம்பர் 25ம் திகதி சைமன் பிர்ச்(Simon Birch) என்ற 39 வயது இளைஞர் கிறிஸ்துமஸ் தினத்தன்று கழுத்தில் பலத்த காயங்களுடன் ஆடம் ஜென்கின்ஸ்(Adam Jenkins) என்பவர் வீட்டில் இறந்து கிடந்தார்.
இதையடுத்து ஆடம் ஜென்கின்ஸ் கைது செய்யப்பட்டு கொலை தொடர்பான வழக்கில் நியூகேஸில் கிரவுன் நீதிமன்ற நீதிபதி முன்னிலையில் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டார்.
Simon Birch (FAMILY PHOTO)
வழக்கு குறித்து விவரித்த நீதிபதி, பாதிக்கப்பட்ட சைமன் பிர்ச் மற்றும் ஜென்கின்ஸின் சகோதரி எம்மா-வும் சுமார் இரண்டரை ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளனர், இந்த காலத்தில் எம்மா மீது பல முறை காதலன் சைமன் பிர்ச் வன்முறையை நிகழ்த்தியுள்ளார்.
இந்நிலையில் காதல் ஜோடியை குடும்பத்துடன் தங்களுடைய வீட்டில் நடைபெறும் கிறிஸ்துமஸ் தின கொண்டாட்டத்தில் கலந்து கொள்ளுமாறு ஆடம் ஜென்கின்ஸ் அழைப்பு விடுத்துள்ளார்.
Adam Jenkins(NORTHUMBRIA POLICE)
ஆனால் இந்த கொண்டாட்டத்தின் இறுதியில் ஆடம் ஜென்கின்ஸின் சகோதரியை அவரது காதலன் சைமன் பிரிச் அடித்து தாக்கி சுயநினைவற்ற நிலைக்கு தள்ளியுள்ளார்.
பிரிச்-சை வெளியே தள்ள முற்பட்ட போது அவர் சமையல் அறையில் வைத்து பூட்டப்பட்டார். இருப்பினும் அவரது அலறல் சத்தம் ஆடம் ஜென்கின்ஸின் குடும்பத்திற்கு பயத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதன்பிறகு ஆடம் ஜென்கின்ஸுக்கும் சைமன் பிர்ச்-க்கும் இடையே ஏற்பட்ட மோதலில் கழுத்தில் பலத்த காயமடைந்து சைமன் பிரிச் உயிரிழந்தார்.
BBC
8 ஆண்டுகள் சிறைத் தண்டனை
விசாரணையின் இறுதியில் 36 வயதுடைய ஜென்கின்ஸ் மீது கொலை குற்றம் நிரூபிக்கப்பட்டது.
இதையடுத்து அவருக்கு 8 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை விதித்து தீர்ப்பு வழங்கப்பட்டது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |