பிரித்தானியாவின் பரபரப்பான சாலையில் ஆண் ஒருவருக்கு கத்திக்குத்து: பொலிஸார் முக்கிய வேண்டுகோள்
பிரித்தானியாவின் நகர மையத்தில் உள்ள கடை வீதியில் ஆண் ஒருவர் கத்திக்குத்து தாக்குதலால் பாதிக்கப்பட்டுள்ளார்.
பிரித்தானியாவில் கத்திக்குத்து
பிரித்தானியாவின் லீவர்பூலின் நகர மையத்தில் ஆண் ஒருவர் கத்திக்குத்து காயங்களுடன் கண்டுபிடிக்கப்பட்டார்.
வியாழக்கிழமை இரவு 8:55 மணிக்கு சர்ச் ஸ்ட்ரீட்டில் பகுதியில் ஆண் ஒருவர் கத்தியால் தாக்கப்பட்டதை தொடர்ந்து சம்பவ இடத்திற்கு அழைக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மேலும் உடனடியாக அவர் காயங்களுடன் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டதாகவும், அவர் பிளேடட் ஆயுதம்(bladed weapon) கொண்டு தாக்கப்பட்டு இருப்பதாகவும் Merseyside பொலிஸார் தகவல் தெரிவித்துள்ளனர்.
விசாரணை தீவிரம்
இதனை தொடர்ந்து தாக்குதல்தாரி கைது செய்வது தொடர்பான விசாரணை தீவிரமாக நடைபெற்று வருகிறது.
இது தொடர்பாக பொலிஸார் அப்பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆராய்ந்து வருகின்றனர், மேலும் கத்திக்குத்து சம்பவம் தொடர்பாக விவரம் தெரிந்தவர்கள் உடனே தகவல் வழங்க முன்வருமாறும் பொலிஸார் கேட்டுக் கொண்டுள்ளனர்.
தலைமை காவல் அதிகாரி இது குறித்து பேசிய போது, தங்கள் தெருக்களில் கத்திக்குத்து போன்ற வன்முறைக்கு இடமில்லை என்றும், சம்பவம் குறித்த விவரம் அறிந்தவர்கள் விசாரணைக்கு முன்வருமாறு கேட்டுக் கொள்கிறேன் என தெரிவித்துள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |