16 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா வந்த பிரித்தானிய இளைஞர்., உணர்ச்சிபூர்வமான வீடியோ வைரல்
16 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா வந்த பிரித்தானிய இளைஞர் ஒருவர் உணர்ச்சிபூர்வமான வீடியோவை பகிர்ந்துள்ளார்.
லண்டனை சேர்ந்த ராப் லெங் (Raph Leng), இந்தியாவில் தனது குழந்தைப் பருவத்தைக் கழித்த வீட்டை 16 ஆண்டுகளுக்குப் பிறகு பார்வையிட்டு, நெகிழ்ச்சிப் பூர்வமான தருணங்களை சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ளார்.
இந்த வீடியோ தற்போது இன்ஸ்டாகிராமில் வைரலாக பரவி வருகிறது.
“இந்த இடம் என்னை உணர்ச்சியில் மூழ்கடிக்கிறது,” என வீடியோவில் பேசும் லெங், தனது வீட்டு கதவைத் திறப்பதற்கு முன் கண்ணீரோடு நின்றார்.
பின்னர், தனது பழைய வீடியோக்கள், குறிப்பாக ஒரு யானையுடன் விளையாடும் வீடியோவை பகிர்ந்தார்.
"இந்தியா எனக்கு மிகவும் பிடிக்கும்" என அவர் பதிவின் தலைப்பில் குறிப்பிட்டுள்ளார். தனது குழந்தைப் பருவ வீட்டின் மீது உள்ள அன்பும், கடந்த கால நினைவுகளும் வீடியோவில் தெளிவாக காணப்படுகிறது.
அதனை பார்த்த பலர், தங்களுடைய சிறப்பான நினைவுகளை பகிர்ந்துள்ளனர். ஒருவர், “இந்த வீடியோ எனது குழந்தைப் பருவ நினைவுகளை மீண்டும் கொண்டு வந்தது,” எனக் கூற, மற்றொருவர், “நானும் என் பாட்டியின் வீட்டை நினைத்து அழுகிறேன்,” என்று எழுதியுள்ளார்.
தற்போது இந்தியா சுற்றுலாவில் இருக்கும் லெங், தனது பயண அனுபவங்களை Instagram-ல் தொடர்ந்து பகிர்ந்து வருகிறார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |