இந்தியாவிற்கு ஆதரவாக இருக்க வேண்டும்: பிரித்தானிய நாடாளுமன்றத்தில் பிரீத்தி படேல்
பஹல்காம் பயங்கரவாத தாக்கத்தையடுத்து, பிரித்தானியா இந்தியாவிற்கு ஆதரவாக நிற்க வேண்டும் என பிரீத்தி படேல் கூறியுள்ளார்.
பிரித்தானியாவைச் சேர்ந்த இந்திய வம்சாவளி எம்பி மற்றும் முன்னாள் உள்துறை அமைச்சரான பிரீத்தி படேல், பஹல்காம் சம்பவம் ஒரு “பயங்கரவாதச் செயல்” எனக் கடுமையாக கண்டித்துள்ளார்.
பிரித்தானிய நாடாளுமன்றத்தில் பேசிய அவர், இந்தக் கடின நேரத்தில் பிரித்தானியா தனது நட்புறவான இந்தியாவுடன் உறுதியாக நிலைக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.
பிரீத்தி படேல், 2002-ஆம் ஆண்டில் நடந்த நியூடெல்லி அறிவிப்பு முதல் 2022-ஆம் ஆண்டின் விரிவான உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு கூட்டாண்மை வரை இந்தியா-பிரித்தானிய பாதுகாப்பு ஒத்துழைப்பு நீடித்துவருவதை நினைவூட்டினார். இது இந்தியா-பிரிட்டன் 2030 ரோட்மாப்பில் அங்கீகரிக்கப்பட்டுள்ளது.
ஏப்ரல் 22 அன்று, “மினி சுவிட்சர்லாந்து” என அழைக்கப்படும் பஹல்காம் பகுதியில் சுற்றுலாவிற்கு வந்தவர்களை குறிவைத்து பயங்கரவாதிகள் தாக்கினர்.
இது 2019 புல்வாமா தாக்குதலுக்குப் பிறகு நடந்த மிக மோசமான பயங்கரவாத தாக்குதலாகும்.
இந்த தாக்குதலுக்கு, பாகிஸ்தானை தாயகமாகக் கொண்ட லஷ்கர்-ஏ-தொய்பா பயங்கரவாத அமைப்பின் நிழல் அமைப்பான TRF பொறுப்பேற்றது என கூறப்பட்டது. பின்னர் TRF அதனை மறுத்துள்ளது.
My thoughts continue to be with those affected by the terrorist attack in Pahalgam. We must stand with our Indian friends at this time. In the House of Commons I pressed the UK Government on what they are doing to support the Government of India in response, and how we can work… pic.twitter.com/3ksQ2eUe4Y
— Priti Patel MP (@pritipatel) April 30, 2025
இந்த தாக்குதலுக்கு லஷ்கர் அமைப்பே நேரடியாக பொறுப்பாக இருக்குமென பிரித்தானிய அரசு நம்புகிறதா அல்லது இந்த பயங்கரவாத செயலில் ஈடுபட்டவர்களின் பாகிஸ்தானுடன் எல்லை தாண்டிய தொடர்புகள் குறித்து அரசாங்கத்திற்கு தெரியுமா என்பது பற்றிய முழுமையான தகவலை வெளியிட வேண்டுமெனவும் பிரீத்தி படேல் கேள்வி எழுப்பினார்.
அமெரிக்க துணை ஜனாதிபதி ஜே.டி.வான்ஸ் மற்றும் அவரது குடும்பத்தினர் இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்த நேரத்தில் இந்த தாக்குதல் நடந்ததாக பிரீத்தி படேல் கூறினார்.
இந்த தாக்குதல், இந்தியா-பாகிஸ்தான் உறவுகளை பாதிக்கும் அபாயம் உள்ளதா, பிரித்தானியா இதை சமாளிக்க என்ன நடவடிக்கை எடுத்துள்ளது என்றும் அவர் கேட்டுள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |
Priti Patel on Pahalgam attack, UK India terror cooperation, Lashkar-e-Taiba Pahalgam attack, UK MP condemns Kashmir terror, Pahalgam attack 2025 news, India Pakistan tension April 2025, UK Parliament on India terrorism, Terrorist attack in Kashmir 2025, India UK counterterrorism partnership, TRF and LeT terror links