ஏமனில் களமிறங்கிய பிரித்தானிய போர் விமானங்கள்., அமெரிக்காவுடன் இனைந்து ஹவுதிகள் மீது தாக்குதல்
ஏமனில் ஹவுதிகள் மீது பிரித்தானியா, அமெரிக்கா இணைந்து விமான தாக்குதல் நடத்தியுள்ளன.
அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு ட் ரம்ப் தலைமையிலான ஆட்சியில், ஹவுதி அமைப்புகளை நசுக்கும் நடவடிக்கையாக, பிரித்தானியா மற்றும் அமெரிக்கா ஆகிய இரு நாடுகளும் 2025 ஏப்ரல் 29-ஆம் திகதி ஏமனில் உள்ள ஹூதி இலக்குகளை தாக்கியதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
பிரித்தானியாவின் பாதுகாப்பு அமைச்சகம் வெளியிட்டுள்ள தகவலின்படி, ஏமனின் தலைநகர் சனா நகரின் தெற்குப் பகுதியில் ஹவுதிகள் பயன்படுத்திய ட்ரோன் உற்பத்தி கட்டிடங்கள் குறிவைக்கப்பட்டன.
ராயல் ஏர் ஃபோர்ஸ் சார்பில் டைஃபூன் யுத்த விமானங்கள் தீவிர ஆய்விற்குப் பின்னர் இரவில் குறித்த இடங்களை வெற்றிகரமாக தாக்கியதாகவும், விமானங்கள் அனைத்தும் பாதுகாப்பாக திரும்பியதாகவும் தெரிவித்துள்ளது.
2023 அக்டோபரில் இஸ்ரேல்-காசா போர் தொடங்கியதிலிருந்து, ஹவுதி இயக்கம் பலமுறை அமெரிக்க மற்றும் சர்வதேச கப்பல்களை செங்கடல் மற்றும் அடென் வளைகுடாவில் தாக்கியுள்ளது.
இதைத் தடுக்க அமெரிக்கா “Operation Rough Rider” என்ற பெயரில் மார்ச் 15 முதல் 800-க்கும் மேற்பட்ட விமானத் தாக்குதல்களை நடத்தியுள்ளது.
இந்த தாக்குதல்கள் ஹவுதிகள் மீது கடுமையாக தாக்கியபோதிலும், அவர்கள் பல அமெரிக்க ட்ரோன்களை சுட்டு வீழ்த்தியதாகவும், சில பிரதேசங்களில் அவர்கள் செயலில் இருக்கின்றனர் என்பதும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த தாக்குதலுக்கு முன்னதாக, ஹவுதிகள் அமெரிக்க தாக்குதலில் வௌிநாட்டு அகதிகள் அடைக்கலமாக இருந்த சிறைசாலை தாக்கப்பட்டதாக கூறினர். இதுகுறித்து, அமெரிக்காவின் CENTCOM ஆய்வு நடத்தும் நடவடிக்கையில் உள்ளது.
இந்த தாக்குதல், செங்கடல் பகுதியிலுள்ள கப்பல் போக்குவரத்தைப் பாதுகாக்கும் முயற்சியாகவும், பிரித்தானியா மற்றும் அமெரிக்காவின் புதிய பயணத்தைக் குறிக்கும் முக்கிய அத்தியாயமாகவும் பார்க்கப்படுகிறது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |