ரோபோ ஷங்கர் மரணம் குறித்து பிரித்தானிய ஊடகம் வெளியிட்டுள்ள செய்தி
தமிழ் நடிகரான ரோபோ ஷங்கருடைய மரணம் குறித்து பிரித்தானிய ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
பிரித்தானிய ஊடகம் வெளியிட்டுள்ள செய்தி
அதாவது, 2019ஆம் ஆண்டு வெளியான தி லயன் கிங் திரைப்படத்தின் தமிழ் மொழிபெயர்ப்பில், பும்பா என்னும் பாத்திரத்துக்கு பின்னணி குரல் கொடுத்திருந்தார் ரோபோ ஷங்கர்.
அதேபோல, 2024ஆம் ஆண்டு, முஃபாசா: தி லயன் கிங் என்னும் பெயரில் வெளிவந்த படத்திலும் பும்பா என்னும் பாத்திரத்துக்கு பின்னணி குரல் கொடுத்திருந்தார் ரோபோ ஷங்கர்.
ஆகவே, ’Beloved The Lion King star dies age 46’ என செய்தி வெளியிட்டுள்ளது, Daily Express என்னும் பிரித்தானிய ஊடகம்.
Fran Winston என்னும் பெண் ஊடகவியலாளர் இந்த செய்தியை அந்த ஊடகத்திற்காக எழுதியுள்ளார்.
தமிழ் திரைப்பட உலகில், தனித்துவமான நகைச்சுவை நடிப்பால் ரசிகர்களை கவர்ந்த நடிகர் ரோபோ ஷங்கர் (46), நேற்று, அதாவது, செப்டம்பர் மாதம் 18ஆம் திகதி காலமானார்.
நேற்று முன்தினம் படப்பிடிப்பு ஒன்றின்போது மயங்கி விழுந்த ரோபோ சங்கர் சிகிச்சைக்காக தனியார் மருத்துவமனை ஒன்றில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
ஆனால், சிகிச்சை பலனின்றி நேற்று இரவு அவர் உயிரிழந்துவிட்டதாக ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |