பிரித்தானியாவை மூடும் மோசமான வானிலை: புதிய மஞ்சள் எச்சரிக்கை விடுத்த Met அலுவலகம்
பிரித்தானியாவில் பல முக்கிய பகுதிகளுக்கு மெட் அலுவலகம் புதிய மஞ்சள் எச்சரிக்கை விடுத்துள்ளது.
மஞ்சள் எச்சரிக்கை
2026 ம் ஆண்டின் தொடக்கத்தில் இருந்தே பிரித்தானியாவில் பல பகுதிகளில் மழை பொழிவானது நீடித்து வருகிறது.
இந்நிலையில் தெற்கு இங்கிலாந்து மற்றும் தெற்கு வேல்ஸ் பகுதிகளுக்கு புதிய மஞ்சள் எச்சரிக்கையை பிரித்தானியா வானிலை மையம்(Met Office) விடுத்துள்ளது.
மழை மேகங்கள் கிழக்கு நோக்கி நகர்வதால் ஹாம்ப்ஷயர், ஐல் ஆஃப் வைட், போர்ட்ஸ்மவுத், சவுத்தாம்ப்டன், மேற்கு சசெக்ஸ், கார்ன்வால், டெவோன், டார்செட், ஸ்வான்சீ மற்றும் நியூபோர்ட் பகுதிகளில் பலத்த காற்றோடு கூடிய கனமழை பெய்யக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

200-க்கும் மேற்பட்ட இடங்களுக்கு ஏற்கனவே நாட்டின் சுற்றுச்சூழல் முகமை வெள்ள அபாய எச்சரிக்கை விடுத்திருந்த நிலையில் இந்த புதிய வானிலை எச்சரிக்கையானது மக்களுக்கு கவலையை ஏற்படுத்தியுள்ளது.
இந்த மஞ்சள் வானிலை எச்சரிக்கையானது திங்கட்கிழமை மதியம் 12 மணி முதல் நள்ளிரவு வரை அமுலில் இருக்கு என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் மேல் குறிப்பிட்ட இடங்களில் உள்ள சில பகுதிகளில் 30 மிமீ வரை மழை பெய்யக்கூடும் என்று கணிக்கப்பட்டுள்ளது.
சாத்தியமான பாதிப்புகள்
பிரித்தானியாவின் மோசமான வானிலை காரணமாக சாலைகளில் போக்குவரத்து தாமதங்கள் ஏற்படலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
சில சமயங்களில் பேருந்து மற்றும் ரயில் சேவைகள் பாதிக்கப்படலாம் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது.
மோசமான வானிலை காரணமாக சில பகுதிகளில் மின்சார விநியோகம் தடை படலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |