பாலியல் அத்துமீறல் வழக்கில் பிரித்தானிய பொலிஸ் அதிகாரிக்கு தண்டனை: 7 மணி நேர விசாரணைக்கு பிறகு தீர்ப்பு
பிரித்தானியாவில் மெட் பொலிஸ் அதிகாரி ஒருவர் பிரைட்டன் கடற்கரையில் பெண் ஒருவரை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ளார்.
பெண்ணிடம் அத்துமீறல்
பிரித்தானியாவில் 2021ம் ஆண்டு ஜூலை 17ம் திகதி 34 வயதான மெட் பொலிஸ் அதிகாரி சார்ஜென்ட் லாரன்ஸ் நைட், பிரைட்டன் கடற்கரைக்கு அப்பால் உள்ள கடல் பகுதியில் பெண் ஒருவரை பாலியல் வன்கொடுமை செய்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
அந்நியரான பெண் ஒருவரை அதிகாலை மெட் பொலிஸ் அதிகாரி சார்ஜென்ட் லாரன்ஸ் நைட் சந்தித்ததாக கூறப்படுகிறது.
Sussex News and Pictures
பிறகு இருவரும் கடற்கரைக்கு நடந்து சென்று, அங்கு ஆடைகளை கலைந்து, பின் உறவில் ஈடுபட்டதாக வழக்கறிஞர்கள் தகவல் தெரிவித்துள்ளனர்.
குற்றச்சாட்டுகளை மறுக்கும் லாரன்ஸ் நைட்
இந்நிலையில் கிழக்கு லண்டனின் லெய்டனை சேர்ந்த பொலிஸ் அதிகாரி சார்ஜென்ட் லாரன்ஸ் நைட் மீது பாலியல் அத்துமீறல் மற்றும் பாலியல் வன்கொடுமை குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளது.
PA
ஆனால் பொலிஸ் அதிகாரி சார்ஜென்ட் லாரன்ஸ் நைட் தன்மீது சுமத்தப்பட்ட கற்பழிப்பு குற்றச்சாட்டை முற்றிலுமாக மறுத்தார்.
இருப்பினும் சவுத்வார்க் கிரவுன் நீதிமன்றத்தில் ஏழு மணி நேரத்திற்கும் மேலாக நடைபெற்ற விசாரணையின் இறுதியில் பெரும்பாலான தீர்ப்பின் அடிப்படையில் பொலிஸ் அதிகாரி சார்ஜென்ட் லாரன்ஸ் நைட் பாலியல் வன்கொடுமை வழக்கில் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |