ரஷ்யாவில் உளவாளிகளை சேர்க்க புதிய டார்க் வெப் தளத்தை தொடங்கிய பிரித்தானியா
ரஷ்யா உள்ளிட்ட பல நாடுகளில் உளவாளிகளை சேர்க்க பிரித்தானியா டார்க் வெப் தளத்தை தொடங்கியுள்ளது.
பிரித்தானியாவின் வெளிநாட்டு உளவுத்துறை அமைப்பான MI6, ஒரு புதிய முயற்சியாக dark web portal-ஐ அறிமுகப்படுத்தியுள்ளது.
சைலன்ட் கூரியர் (Silent Courier) எனப்படும் இந்த தளம், ரஷ்யா மற்றும் உலகின் பல்வேறு பகுதிகளில் உள்ள இளவுத் தகவல்களை கொண்ட நபர்களை பாதுகாப்பான முறையில் தொடர்பு கொள்ள அழைப்பு விடுத்துள்ளது.
இந்த தளத்தை அணுக, பயனர்கள் Tor எனப்படும் பாதுகாப்பான இணைய உலாவியை பயன்படுத்தவேண்டும் என MI6 அறிவுறுத்தியுள்ளது.
மேலும், தங்களை அடையாளம் காண முடியாத வகையில் தனிப்பட்ட மின்னஞ்சல் கணக்குகள் மற்றும் சாதனங்களை பயன்படுத்தவேண்டும் என்றும் அறிவுறுத்தியுள்ளது.
Tor உலாவி தடை செய்யப்பட நாடுகளில், VPN பயன்பாட்டை பரிந்துரைக்கின்றனர்.
இந்த முயற்சியின் மூலம், பயங்கரவாதம் மற்றும் எதிரி உளவுத்துறைகளின் நடவடிக்கைகள் தொடர்பான முக்கிய தகவல்களை பெற்றுக்கொள்வது MI6-ன் நோக்கமாகும்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |
UK new Dark Web portal, UK launches new Dark Web spy portal, Silent Courier MI6, MI6 Dark Web portal