ரஷ்ய அச்சுறுத்தலை எதிர்கொள்ள பெரும் செலவில் பிரித்தானியா அறிமுகம் செய்யும் புதிய திட்டம்
கடலுக்கடியில் பதிக்கப்பட்டுள்ள கேபிள்கள் மற்றும் எரியாயுக் குழாய்களை ரஷ்ய கப்பல்கள் நாசமாக்காமல் தடுப்பதற்காக புதிய ராணுவ திட்டம் ஒன்றை பிரித்தானிய அரசு அறிமுகம் செய்ய உள்ளது.
புதிய ராணுவ திட்டம்
ரஷ்யா உக்ரைனை ஊடுருவியதிலிருந்தே பல ஐரோப்பிய நாடுகள் ரஷ்யா தங்களையும் தாக்கக்கூடும் என்னும் அச்சம் காரணமாக பாதுகாப்பு நடவடிக்கைகளை அதிகரித்துவருகின்றன.

இந்நிலையில், ரஷ்யாவுக்கு சொந்தமான Yantar என்னும் உளவுக் கப்பல், பிரித்தானிய கடல் பகுதியில் சுற்றுவது கடந்த மாதம் தெரியவந்தது.
அந்த உளவுக் கப்பல், கடலுக்கடியில் பதிக்கப்பட்டுள்ள பிரித்தானியாவுக்கு அத்தியாவசியமானவையாகிய கேபிள்கள் மற்றும் எரியாயுக் குழாய்களை உளவு பார்க்கலாம் என்னும் அச்சம் உருவானது.
அதைத் தொடர்ந்து, கடலுக்கடியில் செல்லும் கேபிள்கள் மற்றும் எரியாயுக் குழாய்களை பாதுகாப்பதற்காக, புதிய ராணுவ திட்டம் ஒன்றை பிரித்தானிய அரசு அறிமுகம் செய்ய உள்ளது.

The Atlantic Bastion என பெயரிடப்பட்டுள்ள அந்த திட்டத்தின் கீழ், ஆளில்லாமல் செயற்கை நுண்ணறிவு மூலம் இயங்கும் வாகனங்கள், போர்க்கப்பல்கள் மற்றும் விமானங்கள் மூலம் கடலுக்கடியில் செல்லும் கேபிள்கள் மற்றும் எரியாயுக் குழாய்கள் பாதுகாக்கப்பட உள்ளன.
விரைவில் அறிமுகமாகவிருக்கும் இத்திட்டத்துக்காக, சுமார் 14 மில்லியன் பவுண்டுகள் செலவிடப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |