பிரித்தானியாவில் 29 வயது இளைஞரின் மோசமான செயல்: வழங்கப்பட்டுள்ள எதிர்பாராத தீர்ப்பு
பிரித்தானியாவில் மசூதிகளுக்கு வெளியே தாக்குதல் நடத்திய நபர் மனநல காப்பகத்தில் அடைக்கப்பட்டுள்ளார்.
பிரித்தானிய நீதிமன்றத்தின் தீர்ப்பு
பிரித்தானிய நீதிமன்றம் முகமது அப்கரை( Mohammed Abbkr) தனிச்சிறப்பு மனநல காப்பகத்தில் கால வரையறை இன்றி அடைப்பு வைக்க தீர்ப்பளித்துள்ளது.
2023ம் ஆண்டு பிப்ரவரி மற்றும் மார்ச் மாதங்களில் லண்டன் மற்றும் பர்மிங்ஹாம் நகரங்களில் வீட்டிற்கு சென்ற மற்றும் மசூதிகளில் இருந்து வெளியே வந்த வயதான Hashi Odowa மற்றும் Mohammed Rayaz ஆகிய இரண்டு நபர்களுக்கு தீ வைத்த குற்றத்திற்காக Mohammed Abbkr கைது செய்யப்பட்டார்.
இந்த தாக்குதல்களில் 70 வயதுக்கு மேற்பட்ட இரு பாதிக்கப்பட்டவர்களும் கடுமையாக காயமடைந்தனர். மேலும், பிரித்தானியா முழுவதும் உள்ள சமூகத்தினரிடையே அச்சத்தை ஏற்படுத்தியது.
மனநல பிரச்சனை காரணமாக தாக்குதல்?
தாக்குதலுக்கான உண்மையான நோக்கம் தெளிவாக இல்லாவிட்டாலும், அதிகாரிகள் இது தீவிரவாத தாக்குதல்கள் அல்ல என்று கூறியுள்ளனர்.
குற்றத்தின் கொடூரத்தையும், அப்கர் தொடர்ந்து பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்படுத்தும் அபாயத்தையும் கருத்தில் கொண்டு, நீதிமன்றம் அவரை பாதுகாப்பான மனநல காப்பகத்தில் காலவரையறை இன்றி தடுத்து வைக்க உத்தரவிட்டது.
மனநல சிகிச்சைகள் வழங்கப்பட்டு அவர் குணமடைந்ததும், பொதுமக்களுக்கு பாதுகாப்பு அச்சுறுத்தல் இல்லை என கருதப்பட்டால் மட்டுமே விடுதலை செய்யப்படுவார் என்று கூறப்படுகிறது.
அவரை விடுதலை செய்வது குறித்த முடிவு இறுதியாக பிரித்தானிய அரசாங்கத்திடம் இருக்கும் என்று கூறப்படுகிறது. Mohammed Abbkr சூடானில் இருந்து 2017ல் பிரித்தானியாவுக்கு புலம்பெயர்ந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |