பிரித்தானியாவை குலைநடுங்க வைத்த முக்கிய குற்றவாளிகள் சிறையில் இருந்து விடுவிப்பு
பிரித்தானியாவின் தெருக்களை நடுங்க வைத்த பயங்கர குற்றவாளிகள் 11 பேர்களை இந்த ஆண்டுக்குள் விடுவிக்க இருப்பதாக பகீர் தகவல் வெளியாகியுள்ளது.
பிரித்தானியாவின் மிக ஆபத்தான குற்றவாளிகள் என அடையாளம் காணப்பட்டுள்ள இவர்கள் அடுத்த சில மாதங்களில் ஒவ்வொருவராக விடுவிக்கப்பட உள்ளனர்.
அவர்களின் தண்டனைக் காலம் முடிவுக்கு வரும் நிலையிலேயே குறித்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட உள்ளது. மேலும், இவர்களை கண்காணிப்பதே MI5 மற்றும் காவல்துறைக்கு பெரும் பொருட்செலவை ஏற்படுத்தியிருந்தது.
மொத்தம் 11 குற்றவாளிகள் இந்த ஆண்டு இறுதிக்குள் விடுவிக்கப்பட உள்ளதாக நீதித்துறை அமைச்சரகம் தகவல் வெளியிட்டுள்ளது. மேலும், எதிர்வரும் இரண்டு ஆண்டுகளில் அடுத்த 21 குற்றவாளிகள் விடுவிக்கப்பட உள்ளனர்.
2026 இறுதிக்குள் மேலும் 11 குற்றவாளிகள் தண்டனைக் காலம் முடிந்து விடுதலையாக உள்ளனர். கென்ட்டின் புளூவாட்டர் ஷாப்பிங் சென்டர் உட்பட முக்கிய இடங்களில் வெடிகுண்டு தாக்குதலுக்கு இலக்கு வைத்த 38 வயதான ஜவாத் அக்பரின் பரோல் விசாரணை துவங்கப்பட உள்ளது.
17½ ஆண்டுகளாக ஜவாத் அக்பர் சிறையில் உள்ளார். படுக்கை அறைக்குள் வைத்து வெடிகுண்டு தயாரித்த 22 வயது நாஜி ஜாக் கோல்சன் எதிர்வரும் அக்டோபரில் விடுதலை செய்யப்பட உள்ளார்.
அல்-கொய்தாவின் மிக உயர்ந்த பொறுப்பில் உள்ள இங்கிலாந்து பயங்கரவாதி 46 வயது ரங்சீப் அகமது மிக விரைவில் விடுவிக்கப்பட உள்ளார். 2008ல் இருந்தே இவர் சிறையில் உள்ளார்.
விடுவிக்கப்படும் ஒவ்வொரு பயங்கர குற்றவாளிகளையும் பாதுகாப்பு சேவைத்துறை அதிகாரிகள் ஒவ்வொரு 6 வாரத்திற்கும் ஒருமுறை கண்காணித்து அதிகாரிகளுக்கு தகவல் அளிப்பார்கள் என கூறப்படுகிறது.
ஆனால், பயங்கர குற்றவாளிகள் என அடையாளம் காணப்பட்டும், அவர்களை விடுவிப்பது என்பது உண்மையில் பொது சமூகத்திற்கு அச்சுறுத்தல் என எதிர்ப்பும் கிளம்பியுள்ளது.