வேலையை இன்றே தொடங்குகிறோம்..! பிரித்தானியாவின் புதிய பிரதமர் சர் கெய்ர் ஸ்டார்மர் பேச்சு
நாட்டை மாற்றுவது என்பது பொத்தானை அழுத்துவது போன்றது அல்ல என்று பிரித்தானியாவின் புதிய பிரதமர் சர் கெய்ர் ஸ்டார்மர் தெரிவித்துள்ளார்.
வரலாற்று வெற்றி
பிரித்தானியா பொதுத் தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ள நிலையில், 14 ஆண்டுகால கன்சர்வேட்டிவ் கட்சியின் ஆட்சியை வீழ்த்தி சர் கீர் ஸ்டார்மர் தலைமையிலான லேபர் கட்சி ஆட்சியை கைப்பற்றியுள்ளது.
மொத்தமுள்ள 650 இடங்களில் சர் கெய்ர் ஸ்டார்மர் தலைமையிலான லேபர் கட்சி 412 இடங்களையும், ரிஷி சுனக் தலைமையிலான கன்சர்வேடிவ் கட்சி 121 இடங்களையும் கைப்பற்றியுள்ளது.
ஆட்சியமைக்க 326 இடங்கள் தேவைப்படும் நிலையில் லேபர் கட்சி 412 இடங்களை கைப்பற்றி தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சியமைக்க உள்ளது.
பிரதமர் சர் கெய்ர் ஸ்டார்மர் செய்தியாளர் சந்திப்பு
இந்நிலையில் பக்கிங்ஹாம் அரண்மனையில் மன்னர் சார்லஸ் சந்தித்த பிறகு, பிரித்தானிய பிரதமராக டவுனிங் தெருவிற்கு முதல் முறையாக வந்த சர் கெய்ர் ஸ்டார்மர் தங்களுடைய வேலை அவசரமானது, இன்றே அதனை தொடங்குகிறோம் என தெரிவித்தார்.
ஆதரவாளர்களின் கரகோஷங்களுடன் நம்பர் 10 முன்னிலையில் முதல் செய்தியாளர் சந்திப்பை நடத்திய சர் கெய்ர் ஸ்டார்மர், பிரித்தானியாவின் முதல் பிரிட்டிஷ் ஆசிய பிரதமர் என்ற சாதனைக்கு வாழ்த்து தெரிவித்து உரையை தொடங்கினார்.
Who is #KeirStarmer? The man who led #LabourParty from its lowest point to unprecedented victory over Sunak's Tories
— Economic Times (@EconomicTimes) July 5, 2024
Catch the day's latest news and updates ➠ https://t.co/o4StZzRSEm pic.twitter.com/Y37xsC48qo
தொடர்ந்து பேசிய சர் கெய்ர் ஸ்டார்மர், தொழிலாளர் கட்சிக்கு நீங்கள் வாக்களித்து இருந்தாலும் சரி, வாக்கு அளிக்காவிட்டாலும் சரி, எங்கள் அரசு உங்களுக்காக வேலை செய்யும்.
மேலும், நாட்டை மாற்றுவது என்பது பொத்தானை அழுத்துவது போன்றது அல்ல அதற்கு சிறுது காலம் தேவைப்படும் என்றும் பிரித்தானியாவின் புதிய பிரதமராக பொறுப்பேற்றுக் கொண்டுள்ள சர் கெய்ர் ஸ்டார்மர் தெரிவித்துள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |