பிரித்தானியாவின் Newcastle குடியிருப்பு தெருவில் பயங்கர வெடிப்பு: 7 வயது சிறுவனுக்கு நேர்ந்த பரிதாபம்
பிரித்தானியாவின் நியூகேஸில் உள்ள குடியிருப்பு தெருவில் உள்ள சொத்து ஒன்றில் ஏற்பட்ட திடீர் வெடிப்பு விபத்தில் 7 வயது சிறுவன் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
இந்த வெடிப்பு மற்றும் தீ விபத்தில் காயமடைந்த 6 பேர் உடனடியாக மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டுள்ளனர்.
விபத்து நடந்த சம்பவ இடத்துக்கு அவசர அழைப்புகள் அழைக்கப்பட்டதை அடுத்து அதிகாலை 1 மணிக்கு முன்னதாக அருகில் உள்ள வீடுகளில் இருந்த மக்கள் பாதுகாப்பு கருதி வெளியேற்றப்பட்டனர்.
6 குடியிருப்புகள் பாதிப்பு
வெடிப்பு மதிப்பீட்டுக்கு பிறகு பேசிய Tyne மற்றும் Wear தீயணைப்பு மீட்பு குழுவை சேர்ந்த உதவி தலைமை அதிகாரி Lynsey McVay, தீ மற்றும் வெடிப்பு விபத்தில் 6 அடுக்குமாடி குடியிருப்புகள் பாதிக்கப்பட்டு இருப்பதாகவும், அவற்றில் 2 குடியிருப்புகள் மிகவும் மோசமாக பாதிக்கப்பட்டு இருப்பதாக தெரிவித்துள்ளார்.
அதே நேரத்தில் காவல் கண்காணிப்பாளர் ஆடம்ஸ், வெடிப்பு விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருவதாக தெரிவித்துள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |