ஈரான் எதற்கும் தயார்! இஸ்ரேல் பதிலடி தாக்குதல் எப்போது? மத்திய கிழக்கில் பதற்றம்
இஸ்ரேலின் பதிலடி தாக்குதலுக்கு ஈரான் தயாராக இருப்பதாக அந்நாட்டின் வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
ஈரானின் தாக்குதல்
இஸ்ரேலில் நடத்தி வரும் ராணுவ நடவடிக்கையில் ஹமாஸ் தலைவர் இஸ்மாயில் ஹனியே மற்றும் ஹிஸ்புல்லா அமைப்பின் தலைவர் ஹசன் நஸ்ருல்லா கொல்லப்பட்டதை அடுத்து இஸ்ரேல் மீது ஈரான் பதிலடி தாக்குதலை தொடர்ந்தது.
அந்த வகையில் கிட்டத்தட்ட 180க்கும் மேற்பட்ட ஏவுகணைகளை இரவோடு இரவாக ஈரான் ஏவி தாக்குதல் நடத்தியது.
ஈரான் இந்த தாக்குதலை அரங்கேறி கிட்டத்தட்ட இரண்டு வாரங்கள் ஆகிவிட்ட நிலையில், ஒட்டுமொத்த உலகமும் இஸ்ரேலின் பதிலடி தாக்குதலை உற்றுநோக்கி வருகிறது.
எதற்கும் தயார்
இந்நிலையில், இஸ்ரேலின் எந்தவொரு பதிலடி தாக்குதலுக்கு ஈரான் தயாராக இருப்பதாக அந்நாட்டின் வெளியுறவு அமைச்சர் அறிவித்துள்ளார்.
இது தொடர்பாக அப்பாஸ் அராச்சி, ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச்செயலாளர் அன்டோனியோ குட்டெரஸிடம் இஸ்ரேலின் எந்தவொரு சாகக முயற்சிகளையும் எதிர்கொள்ள ஈரான் முழுமையாக தயாராக இருப்பதாக தெரிவித்துள்ளார்.
இதற்கிடையில் அமெரிக்கா வெளியிட்ட அறிக்கைகளில், இஸ்ரேல் ஈரானின் எண்ணெய் கிடங்குகள், அணுசக்தி தளங்களை தாக்க தயாராகி வருவதாக தெரிவித்து இருந்தது.
ஆனால் நேற்று இது தொடர்பாக இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவின் அலுவலகம் தெரிவித்த கருத்தில், இஸ்ரேல் அதன் சொந்த முடிவுகளை எடுக்கும் என்று கூறப்பட்டு இருந்தது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |