ரிஷியை திரும்பிக்கூட பார்க்காமல் கடந்து சென்ற லிஸ் டிரஸ்! மேடையில் அவரைப் பற்றி கூறிய வார்த்தைகள்
கன்சர்வேட்டிவ் கட்சியின் தலைவராக அறிவிக்கப்பட்டதும் லிஸ் டிரஸ் ரிஷி சுனக்கை கடந்து செல்லும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகிவருகிறது.
கன்சர்வேட்டிவ் கட்சித் தலைமைப் பந்தயத்தில் எதிராளியான ரிஷி சுனக்கைத் தோற்கடித்து லிஸ் ட்ரஸ் வெற்றி பெற்றார். இதன் அர்த்தம், லிஸ் ட்ரஸ் பிரித்தானியாவின் அடுத்த பிரதமராகிறார்.
வெளியேறும் பிரதமரான போரிஸ் ஜான்சனின் தலைமையில் வெளியுறவுச் செயலாளராக இருந்த லிஸ்டிரஸ் இந்த டோரி தலைமைப் பந்தயத்தில் 81,326 வாக்குகளையும் (57%), முன்னாள் நிதியமைச்சர் ரிஷி சுனக் 60,399 வாக்குகளையும் (43%) பெற்றார்.
பிரித்தானியாவின் புதிய பிரதமரானார் லிஸ் ட்ரஸ்!
இந்நிலையில், மார்கரெட் தாட்சர் மற்றும் தெரசா மே ஆகியோருக்கு அடுத்தபடியாக, லிஸ் ட்ரஸ் பிரித்தானியாவின் மூன்றாவது பெண் பிரதம மந்திரி ஆகிறார்.
இதனிடையே, கன்சர்வேட்டிவ் கட்சியின் தலைவராக அறிவிக்கப்பட்டதும் லிஸ் டிரஸ் ரிஷி சுனக்கை கடந்து செல்லும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகிவருகிறது.
இந்த வீடியோவில், லிஸ் டிரஸ் ஒரே வரிசையில் அமர்ந்திருந்த சக போட்டியாளரான ரிஷி சுனக்கை திரும்பிக்கூட பார்க்காமல், அவரைக் கடந்து நேரடியாக மேடைக்குச் செல்கிறார்.
Liz Truss walks past Rishi Sunak without shaking his hand as she's announced as the next leader of the Tory party.
— ITV News (@itvnews) September 5, 2022
On stage, she paid tribute to Mr Sunak for a 'hard-fought campaign' that showed the 'depth and breadth' of the Conservative partyhttps://t.co/VlviHRYPbN pic.twitter.com/6QrurGK2dC
அவர் இவ்வாறு செய்தமையால், சக போட்டியாளர் என மரியாதை நிமித்தமாகக்கூட ரிஷியுடன் கைக்குலுக்காமல் சென்றுள்ளார் என பேசப்படுகிறார்.
ஆனால், அவர் மேடையில் தனது வெற்றி உரையை பேசுகையில், கன்சர்வேடிவ் கட்சியின் 'ஆழத்தையும் அகலத்தையும்' வெளிப்படுத்திய 'கடினமான பிரச்சாரத்திற்காக' ரிஷி சுனக்கிற்கு அவர் நன்றி தெரிவிக்கும் விதமாக பேசினார்.