பிரித்தானியா அமெரிக்காவுடன் வர்த்தக போரில் ஈடுபடப்போவதில்லை-பிரதமர் ஸ்டார்மர்
ட்ரம்ப் அறிவித்துள்ள வரி விதிப்பிற்கு எதிராக பிரித்தானியா வர்த்தக போரில் ஈடுபடப்போவதில்லை என பிரதமர் ஸ்டார்மர் தெரிவித்துள்ளார்.
பிரித்தானியாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் கார்களுக்கு 25 சதவீதம் வரி விதிப்பதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு ட்ரம்ப் அறிவித்துள்ளார்.
அதனை எதிர்த்து பிரித்தானியா அமெரிக்காவிற்கு எதிராக வர்த்தக போரில் ஈடுபடப்போவதில்லை என பிரதமர் கெய்ர் ஸ்டார்மர் தெரிவித்துள்ளார்.
ட்ரம்ப் விதித்துள்ள வரிஏப்ரல் 2-ஆம் திகதி முதல் அமுலுக்கு வரவுள்ளன. இதனை தவிர்க்கும் முயற்சியாக அமெரிக்க அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்திவருவதாக ஸ்டார்மர் கூறியுள்ளார்.
உலகளாவிய தாக்கம்
இந்த வரிகள் உலகளாவிய மோட்டார் வணிகத்தையம் விநியோக சங்கிலியையும் பெரிதும் பாதிக்கக்கூடும். மேலும், Jaguar Land Rover (JLR) போன்ற பிரித்தானிய நிறுவனங்கள் மிகுந்த பாதிப்பை எதிர்கொள்ளும் வாய்ப்பு உள்ளது.
ஜாகுவார் லேண்ட் ரோவர் நிறுவனத்தை இந்தியாவின் டாடா மோட்டார்ஸ் (TataMotors) கொண்டுள்ளதால், இந்த வரிகளால் ஏற்படும் விளைவுகளைபற்றிய கூடுதல் தகல்களுக்காக காத்திருக்கின்றனர்.
பிரித்தானியா ஆண்டுக்கு 7.6 பில்லியன் பவுண்டு மதிப்புள்ள கார்களை அமெரிக்காவிற்கு ஏற்றுமதி செய்துவருகிறது. ஐரோப்பிய ஒன்றியத்தையடுத்து அமெரிக்க சந்தையில் அதிக கார்களை ஏற்றுமதி செய்யும் நாடாக பிரித்தானியா உள்ளது.
இந்த புதிய வரிகளை அறிவிப்பதன் மூலம் அமெரிக்காவின் வேலைவாய்ப்புகள் அதிகரிக்கும் மற்றும் உள்நாட்டில் உற்பத்தி மேம்படும் என ட்ரம்ப் நம்புகிறார்.
பிரித்தானிய அரசாங்கம் அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடத்திவருகிறது. இருநாடுகளும் பரஸ்பர ஒப்பந்தத்தை மேற்கொள்ளும் வாய்ப்பு உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |