பிரித்தானிய அணு ஆயுத தளத்திலிருந்து கதிரியக்க நீர் கசிவு - ஆவணங்கள் வெளியீடு
பிரித்தானியாவின் அணு ஆயுத சேமிப்பு தளத்தில் இருந்து கடலில் கதிரியக்க நீர் கசிந்த ஆவணங்கள் வெளியாகியுள்ளது.
Coulport அணு ஆயுத சேமிப்பு தளத்தில் இருந்து கதிரியக்க நீர் (Tritium), Glasgow அருகில் Loch Long கடலில் கசிந்தது குறித்த அதிகாரபூர்வ ஆவணங்கள் வெளியிடப்பட்டுள்ளன.
இந்த கசிவு Royal Navy பராமரிப்பில் ஏற்பட்ட குறைபாடுகளால் ஏற்பட்டதாக ஸ்காட்லாந்து சுற்றுசூழல் பாதுகாப்பு முகமை (SEPA) தெரிவித்துள்ளது.
2019-ல் அணு ஆயுத சேமிப்பு தளத்தில் ஏற்பட்ட பாரிய குழாய் வெடிப்பால், கதிரியக்க நீர் பெருக்கெடுத்து வடிகால் வழியாக கடலில் கலந்தது.
ஆய்வில், தளத்தின் 1,500 நீர் குழாய்களில் பாதி பழையதாக இருந்தது கண்டறியப்பட்டது.
2010, 2019 மற்றும் 2021-லும் இதேபோல் கதிரியக்க நீர் கசிந்துள்ளது.
2022-ல் பாதுகாப்பு அமைச்சும் வாக்குறுதியளித்த 23 தீர்வு நடவடிக்கைகளில் பல தாமதமாகவே நடைமுறைக்கு வந்துள்ளன.
SEPA அறிக்கையின்படி, இதுவரை வெளியான கதிரியக்க நீரின் அளவு பொதுமக்களின் உடல்நலத்திற்கு ஆபத்தானதாக இல்லை. இருப்பினும், ராயல் நேவியின் நிர்வாகம் மற்றும் தேவையற்ற கதிரியக்க கழிவுகள் உருவாக்கம் குறித்து கடுமையாக விமர்சிக்கப்பட்டுள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |
UK Nuclear Leak 2025, Coulport radioactive water, Loch Long Contamination, UK Royal Navy Maintenance Failure, SEPA Nuclear Report