ஜேர்மனியில் கார் விபத்தொன்றில் நான்கு பேர் பலி: பிரித்தானியர்களா?
ஜேர்மனியில் நேற்று நிகழ்ந்த கார் விபத்தொன்றில் ஒரு ஆணும் மூன்று பெண்களும் பலியானார்கள்.
இந்நிலையில், அந்தக் கார் பிரித்தானிய நம்பர் பிளேட் கொண்ட கார் என்பதால், அதில் பயணித்தவர்கள் பிரித்தானியர்களாக இருக்கக்கூடுமோ என்ற சந்தேகம் ஏற்பட்டுள்ளது.
கார் விபத்தொன்றில் நான்கு பேர் பலி
நேற்று காலை 12. 30 மணியளவில், மத்திய ஜேர்மனியிலுள்ள Reinhardshagen-Veckerhagen மறும் Grebensteinin என்னுமிடங்களுக்கு இடையில் அமைந்துள்ள சாலையில், கார் ஒன்று பயணித்துக்கொண்டிருந்திருக்கிறது.
அந்தக் காரை 32 வயதுடைய ஆண் ஒருவர் இயக்கியுள்ளார். அந்தக் காரில், முறையே 30,31, 32 வயதுடைய மூன்று பெண்கள் இருந்துள்ளார்கள்.
காரை இயக்கியவர் வேகமாகச் சென்றுகொண்டிருந்த காரை வளைவொன்றில் திருப்ப முயல, கார் கட்டுப்பாட்டை இழந்து சாலையை விட்டு விலகி மரங்கள் அடர்ந்த பகுதிக்குள் சென்றுள்ளது.
மரங்கள் மீது மோதிக்கொண்டே சென்ற அந்தக் கார், சுமார் 40 அடி தூரம் சென்ற பிறகுதான் நின்றுள்ளது.
தகவலறிந்து சம்பவ இடத்துக்கு பொலிசார் விரைந்த நிலையில், மருத்துவ உதவிக்குழுவினர் விபத்தில் சிக்கியவர்களை காப்பாற்ற எடுத்த முயற்சிகள் எதுவும் பலனளிக்காமல், நான்கு பேருமே சம்பவ இடத்திலேயே உயிரிழந்துவிட்டதாக ஜேர்மன் பொலிசார் தெரிவித்துள்ளார்கள்.
உயிரிழந்தவர்களை அடையாளம் காணும் முயற்சிகள் துவக்கப்பட்டுள்ளன.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |