30 லட்சம் இழப்பீடு பெற்ற செவிலியர்! பிரித்தானியாவில் கண்ணசைவுகளால் துன்புறுத்திய சக பெண் ஊழியர்!
பிரித்தானியாவில் கண் அசைவுகளை கொண்டு சக பெண் ஊழியரை துன்புறுத்திய சம்பவம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.
30 லட்சம் இழப்பீடு
பிரித்தானியாவில் பெண் மருத்துவர் ஒருவர் பணியிடத்தில் கண் அசைவுகளை கொண்டு துன்புறுத்தப்பட்டது உறுதி செய்யப்பட்டதை அடுத்து அவருக்கு சுமார் 25,254 பவுண்ட்கள்(ரூ.30 லட்சம்) இழப்பீடு வழங்கப்பட்டுள்ளது.
இந்த சம்பவம் தொடர்பாக வெளியான செய்திகளில், பணியாளர்கள் சொற்கள் எதுவும் இல்லாத உடல் மொழியாக கருதப்படும் கண்ணசைவுகள் கூட வேலையிடத்தில் துன்புறுத்தலாக கருதப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
(Right) Jisna Iqbal,
அத்துடன் இத்தகைய நடவடிக்கைகளுக்கு நிறுவனத்தின் முதலாளிகளே பொறுப்பு என்றும் சமீபத்திய உத்தரவு உறுதி செய்துள்ளது.
என்ன நடந்தது?
40 ஆண்டுகளுக்கு மேல் மருத்துவ அனுபவம் கொண்ட 64 வயதான மெளரீன் ஹொவ்சன் என்பவர் எடின்பரோவில் கிரேட் ஜங்ஷன் பல் மருத்துவமனையில் மருத்துவ உதவியாளராக பணியாற்றி வந்துள்ளார்.
இவருடன் இந்தியாவில் பல் மருத்துவராக தகுதி பெற்ற ஜிஸ்னா இக்பால் என்ற பெண் 2024ம் ஆண்டு ஜூலை மாதம் சக ஊழியராக பணிக்கு சேர்ந்துள்ளார்.
பிரித்தானியாவில் மருத்துவர் தகுதி பெறாததால் உதவியாளராக பணியில் சேர்ந்த ஜிஸ்னா இக்பால் தொடக்கத்திலேயே மெளரீன் ஹொவ்சன் பார்த்து வந்த வரவேற்பாளர் பணியை எடுத்துக் கொண்டுள்ளார்.
நாட்கள் செல்ல செல்ல இருவருக்கும் இடையிலான உறவு சிக்கலடைந்துள்ளது.
இந்நிலையில் இந்த சம்பவம் விசாரணைக்கு வந்த நிலையில், மெளரீன் ஹொவ்சன் தான் சக ஊழியரிடம் துப்புரவு பணியாளராக மாறி விட்டதாக உணர்கிறேன் என கண்ணீர் விட்டுள்ளார்.
மேலும் இக்பால் என்னிடம் முரட்டுத்தனமாகவும், கண்ணசைவுகளால் துன்புறுத்தியதாகவும், தன்னை புறக்கணித்ததாகவும் குற்றம் சாட்டினார்.
மெளரீன் ஹொவ்சன் முன்வைத்த குற்றச்சாட்டுகளை இக்பால் மறுத்து இருந்தாலும், விசாரணையின் இறுதியில் மெளரீன் ஹொவ்சன் கூற்றை ஏற்றுக் கொண்டுள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |