பிரித்தானியாவில் பச்சிளம் குழந்தைகளை கொடுமை செய்த இளம்பெண்: நீதிமன்றம் விதித்துள்ள தண்டனை
பிரித்தானியாவில் குழந்தைகளுக்கு எதிராக பல கொடுமைகளை செய்த பள்ளி ஊழியருக்கு 8 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
குழந்தைகளுக்கு கொடுமை செய்த பெண்
மேற்கு லண்டனின் ஹவுன்ஸ்லோவைச் சேர்ந்த 22 வயது ரொக்ஸானா லெக்கா என்ற மழலையர் பள்ளி ஊழியர் கிட்டத்தட்ட 21 சிறு பிள்ளைகளிடம் கொடுமையான பல துஷ்பிரயோக செயல்களில் ஈடுபட்டது கண்டறியப்பட்டது.
தெற்கு லண்டனில் அமைந்துள்ள ரிவர்சைடு நர்சரி பள்ளியில் கடந்த ஆண்டு ஜூன் மாதம் சிறு குழந்தைகளை கிள்ளி கொடுமைபடுத்தியற்காக அவர் வேலையில் இருந்து அனுப்பப்பட்டார்.
இதையடுத்து நடந்த விசாரணையின் இறுதியில் அவர் பல குழந்தைகளுக்கு கொடுமையான பல துஷ்பிரயோகங்களை செய்தது கண்டுபிடிக்கப்பட்டது.
நீதிமன்ற விசாரணை
இதையடுத்து ரொக்ஸானா லெக்கா மீது 16 வயதுக்குட்பட்ட குழந்தைகளை கொடுமை செய்ததாக எழுப்பபட்ட 7 குற்றச்சாட்டுகளை நீதிமன்றத்தில் ஒப்புக் கொண்டுள்ளார்.
அதே நேரத்தில், அவர் மீது கூடுதலாக 14 குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டு குற்றவாளியாக அறிவிக்கப்பட்டதோடு 3 குற்றச்சாட்டுகளில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளார்.
இதனை தொடர்ந்து அவருக்கு சுமார் 8 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |