பிரித்தானியாவின் புதிய 50 மில்லியன் பவுண்ட் திட்டம் - எதற்காக தெரியுமா?
உலகளாவிய ஆராய்ச்சியாளர்களை கவரும் நோக்கில் பிரித்தானிய அரசு 50 மில்லியன் பவுண்ட் நிதியுடன் புதிய திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.
அமெரிக்காவில் கல்வி மற்றும் அறிவியல் சுதந்திரம் கேள்விக்குறியாகியுள்ள நிலையில், இந்த சந்தர்ப்பத்தை சாதகமாக பயன்படுத்திக்கொள்ள நினைத்த பிரித்தானிய அரசு, உலகளாவிய முன்னணி ஆராய்ச்சியாளர்களை பிரித்தானியாவிற்கு இழுப்பதற்காக புதிய திட்டத்தை அறிமுகப்படுத்தவுள்ளது.
இந்த திட்டத்திற்காக பிரித்தானிய அரசு 50 மில்லியன் பவுண்டு நிதியை ஒதுக்கியுள்ளது.
இந்த 'அழைப்பு திட்டம்' முதற்கட்டமாக 10 முக்கிய ஆராய்ச்சி குழுக்களை பிரித்தானியாவில் அடியெடுத்து வைக்கும் வகையில் உதவிடும்.
வாழ்க்கை செலவுகள் மற்றும் ஆராய்ச்சி நிதியுதவிகளை வழங்கும் இந்த முயற்சி, எதிர்காலத்தில் விரிவுபடுத்தும் சாத்தியத்தையும் கொண்டுள்ளது.
தொழில்துறை முக்கியத்துவம் பெறும் உயிரியியல் (Life Sciences), செயற்கை நுண்ணறிவு (AI), பசுமை ஆற்றல் ஆகிய துறைகளில் பயனுள்ள ஆராய்ச்சிகளுக்கு முன்னுரிமை வழங்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
உலகத் தரத்திலான விஞ்ஞானிகளை வரவேற்க பிரித்தானியா தயாராக உள்ளத்தாக்கா அறிவியல், கண்டுபிடிப்பு மற்றும் தொழில்நுட்பத்துறை தெரிவித்துள்ளது.
அமெரிக்காவில் ட்ரம்ப் ஆட்சியில் விஞ்ஞான நிதிகள் குறைக்கப்பட்டமை, காலநிலை மாற்றம் மற்றும் தடுப்பூசி போன்ற பிரிவுகளில் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டமை ஆகியவை இதற்கான பின்னணி காரணங்களில் ஒன்று.
விசா செலவுகள் ஒரு முக்கிய தடையாக இருப்பதை ஹவுஸ் ஆஃப் லார்ட்ஸ் அறிவியல் குழு முன்னணி புள்ளியாக சுட்டிக்காட்டியுள்ளது.
ரசல் குழுவின் சர்வதேச கொள்கைத் தலைவர் பென் மூர் கூறுகையில், “அறிவியல் சாதனைகளின் பின்புலத்தில் உள்ளவர்கள் சர்வதேச ஆராய்ச்சியாளர்களே. அவர்களை இங்கு வரவழைக்கும் விதமாக விசா செலவுகளை குறைக்க வேண்டும்” என்றார்.
கனடா, நார்வே, பிரான்ஸ் உள்ளிட்ட நாடுகளும் இத்தகைய முயற்சிகளை மேற்கொண்டுள்ளன.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |
UK global researcher recruitment 2025, UK attracts international scientists, UK science visa program, UK vs US academic freedom, UK industrial strategy researchers, UK science funding 2025, UK green energy research grants, UK AI researcher relocation program, academic freedom in UK vs US, UK immigration for scientists, UK research relocation funding, best countries for researchers 2025, UK innovation strategy for scientists, UK science and technology jobs international