இந்திய சிற்றுண்டியான பக்கோரா-வை பிறந்த குழந்தைக்கு பெயராக சூட்டிய பிரித்தானிய தம்பதி: வைரல் புகைப்படம்!
இந்திய சிற்றுண்டியின் பெயரை பிறந்த குழந்தைக்கு சூட்டிய பிரித்தானிய தம்பதியினர்.
பிரித்தானிய தம்பதியினருக்கு குவியும் அன்பான வாழ்த்துகள்.
பிரித்தானிய தம்பதியினர் தங்களது பிறந்த குழந்தைக்கு இந்திய சிற்றுண்டியான ”பகோரா” என்ற பெயரினை சூட்டி அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளனர்.
பொதுவாகவே பிறக்கும் குழந்தைகளுக்கு சூட்டப்படும் பெயர்கள் தங்களுக்கு பிடித்தமான மனிதர்களின் பெயர்களையோ, பிடித்த கதாபாத்திரத்தின் பெயர்களையோ அல்லது தங்களது முன்னோர்களின் பெயர்களையோ சூட்டுவது வழக்கம்.
தற்போது உள்ள சமூக சூழ்நிலையில் அனைவருக்குமே தங்களுக்கு பிறக்கும் குழந்தைகளுக்கு வித்தியாசமான மற்றும் அனைவரையும் ஈர்க்கும் வகையிலான பெயர்களை தங்களது குழந்தைகளுக்கு சூட்ட வேண்டும் என்ற எண்ணம் அதிகரித்துள்ளது.
UK parents name their child after Indian dish 'Pakora'; Internet just can't keep calm
— ANI Digital (@ani_digital) September 3, 2022
Read @ANI Story | https://t.co/tXGvA2A9zf#Pakora #Ireland #Funnymemes pic.twitter.com/AN9mljgClS
அந்தவகையில் பிரித்தானியாவில் உள்ள ஒரு தம்பதி தங்களுடைய குழந்தைக்கு மிகவும் பிரபலமான இந்திய சிற்றுண்டி உணவான ”பகோராவை”(Pakora) பெயராக சுட்டியுள்ளனர்.
அந்த தம்பதிக்கு ”பகோரா” மிகவும் பிடித்தமான சிற்றுண்டி வகை என்பதால், அதன் மேல் உள்ள காதலில் தங்களது குழந்தைக்கு பகோரா என பெயர் சூட்டியுள்ளனர்.
இதனை அயர்லாந்தில் உள்ள பிரபல உணவகமான தி கேப்டியன்ஸ் டேபிள்(The Captian's Table) இந்த வேடிக்கையான பெயர் செய்தியை அறிவித்துள்ளது என இந்திய செய்தி நிறுவனமான ANI தெரிவித்துள்ளது.
இதுத் தொடர்பாக தி கேப்டியன்ஸ் டேபிள் சமூக ஊடகங்களில் வெளியிட்டுள்ள தகவலில், தங்கள் உணவகத்திற்கு அடிக்கடி வருகை தரும் தம்பதியினர், தங்கள் குழந்தைக்கு பிரபலமான இந்திய உணவின் பெயரை சூட்டியுள்ளனர் எனத் தெரிவித்துள்ளது.
அத்துடன் அந்தப் பதிவில் பிறந்த குழந்தையின் புகைப்படத்தையும், பெற்றோர் ஆர்டர் செய்த உணவு வகைகளின் விவரங்களை உள்ளடக்கிய ரசீது சீட்டின் புகைப்படத்தையும் பகிர்ந்துள்ளனர்.
கூடுதல் செய்திகளுக்கு: பிரித்தானிய லாட்டரியில் £110m யூரோ மில்லியன்கள் ஜாக்பாட்: அதிர்ஷ்டசாலி யார்?
அந்த சீட்டில் ”பக்கோடா”(pakoda) என்ற பெயரும் இடம்பெற்றுள்ளது, இது இணையதளவாசிகள் மத்தியில் ஆர்வத்தை தூண்டியுள்ளது.
மேலும் இத்தகைய பெயரை சூட்டிய ஜோடிக்கு நெட்டிசன்கள் அன்பான வாழ்த்துகளையும் தெரிவித்து வருகின்றனர்.
Photo : ANI