பிரித்தானிய லாட்டரியில் £110m யூரோ மில்லியன்கள் ஜாக்பாட்: அதிர்ஷ்டசாலி யார்?
பிரித்தானிய லாட்டரியில் £110m யூரோ மில்லியன்கள் ஜாக்பாட்.
அதிர்ஷ்டசாலி வீரர் யார் என்று இதுவரை அடையாளம் காணப்படவில்லை.
பிரித்தானியாவில் லாட்டரி டிக்கெட் வைத்திருப்பவர் வெள்ளிக்கிழமை £110m யூரோ மில்லியன்கள் ஜாக்பாட்டை வென்றுள்ளார் என அறிவிக்கப்பட்டுள்ளது.
பிரித்தானியாவில் வெற்றி எண்கள் 07,12,13,20 மற்றும் 45 அத்துடன் அதிர்ஷ்ட நட்சத்திரங்கள் 03 மற்றும் 12 ஆகிய எண்களை கொண்ட லாட்டரி டிக்கெட்களை வைத்திருப்பவர் வெள்ளிக்கிழமை £110m யூரோ மில்லியன்கள் ஜாக்பாட்டை வென்றுள்ளார் என கேம்லாட் தெரிவித்துள்ளது.
AP
இதுத் தொடர்பாக நேஷனல் லாட்டரியில் கேம்லாட்டின் மூத்த வெற்றியாளர்களின் ஆலோசகர் ஆண்டி கார்ட்டர் தெரிவித்த தகவலில், லாட்டரி வீரர்கள் தங்கள் டிக்கெட்களை எண்களை சரிபார்த்து கொண்டு, அவை அதிர்ஷ்ட எண்களுடன் பொருத்தமாக இருந்தால் இன்றிரவு எங்களை அழைக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள் என தெரிவித்தார்.
அத்துடன் லாட்டரி வீரர்களுக்கு நன்றி தெரிவித்த அவர், இந்த லாட்டரி விளையாட்டின் மூலம் நாடு முழுவதும் நல்ல காரணங்களுக்காக ஒவ்வொரு வாரமும் £ 30 மில்லியனுக்கும் அதிகமான பணம் சேர்க்கப்படுகிறது என தெரிவித்துள்ளார்.
மேலும் இவை நீங்கள் வசிக்கும் இடத்தை மாற்றும் உள்ளூர் திட்டங்கள் முதல் சமீபத்திய காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளில் நமது நாட்டை ஆதரிக்கும் வீரர்களுக்காக பயன்படுத்தப்படுகிறது எனத் தெரிவித்துள்ளார்.
SKY NEWS
£110m யூரோ மில்லியன்கள் ஜாக்பாட்டை வென்றவர் யாரென்று அடையாளம் காணப்படவில்லை. இதுவரை 15 பிரித்தானிய வீரர்கள் மட்டுமே £100mக்கும் அதிகமான ஜாக்பாட்டை வென்றுள்ளனர்.
கூடுதல் செய்திகளுக்கு; இலங்கை திரும்பினார் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச: வீடியோ காட்சி!
கடந்த மே மாதம் லாட்டரி ஜாக்பாட்டில் க்ளௌசெஸ்டர் ஜோடியான ஜோ மற்றும் ஜெஸ் த்வைட் தங்களை £184 மில்லியன் வெற்றியாளராக அறிவிக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.