பாஸ்போர்ட் கட்டணங்கள் தொடர்பில் பிரித்தானியர்களுக்கு ஒரு முக்கிய செய்தி
பிரித்தானியாவில், பாஸ்போர்ட் விண்ணப்பங்களுக்கான புதிய கட்டணங்கள், ஏப்ரல் மாதம் 10ஆம் திகதி அமுலுக்கு வர உள்ளன.
என்னென்ன மாற்றங்கள் கொண்டுவர்ப்பட உள்ளன?
பிரித்தானியாவுக்குள்ளிருந்து ஒன்லைனில் செய்யப்படும் பாஸ்போர்ட் விண்ணப்பத்திற்கான கட்டணம், பெரியவர்களுக்கு 88.50 பவுண்டுகளிலிருந்து 94.50 பவுண்டுகளாகவும், குழந்தைகளுக்கு 57.50 பவுண்டுகளிலிருந்து 61.50 பவுண்டுகளாகவும் உயர உள்ளது.
தபால் மூலம் அனுப்பப்படும் விண்ணப்பத்திற்கான கட்டணம், பெரியவர்களுக்கு 100 பவுண்டுகளிலிருந்து 107 பவுண்டுகளாகவும், குழந்தைகளுக்கு 69 பவுண்டுகளிலிருந்து 74 பவுண்டுகளாகவும் உயர உள்ளது.
பிரித்தானியாவுக்குள்ளிருந்து செய்யப்படும் பிரீமியம் சேவை விண்ணப்பத்திற்கான கட்டணம், பெரியவர்களுக்கு 207.50 பவுண்டுகளிலிருந்து 222 பவுண்டுகளாகவும், குழந்தைகளுக்கு 176.50 பவுண்டுகளிலிருந்து 189 பவுண்டுகளாகவும் உயர உள்ளது.
வெளிநாட்டிலிருந்து பிரித்தானிய பாஸ்போர்ட் பெற ஒன்லைனில் விண்ணப்பிக்கும்போது, விண்ணப்பத்திற்கான கட்டணம், பெரியவர்களுக்கு 101 பவுண்டுகளிலிருந்து 108 பவுண்டுகளாகவும், குழந்தைகளுக்கு 65.50 பவுண்டுகளிலிருந்து 70 பவுண்டுகளாகவும் உயர உள்ளது.
வெளிநாட்டிலிருந்து பிரித்தானிய பாஸ்போர்ட் பெற காகிதத்தில் விண்ணப்பிக்கும்போது, விண்ணப்பத்திற்கான கட்டணம், பெரியவர்களுக்கு 112.50 பவுண்டுகளிலிருந்து 120.50 பவுண்டுகளாகவும், குழந்தைகளுக்கு 77 பவுண்டுகளிலிருந்து 82.50 பவுண்டுகளாகவும் உயர உள்ளது.
பொதுமக்கள், தாங்கள் பயணம் செய்வதற்கு முன்னரே, சரியான நேரத்தில் பாஸ்போர்ட் பெற விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |