இவர்களுக்கு பிரித்தானிய கடவுச்சீட்டு இலவசம்.! விண்ணப்பிக்க கட்டணமில்லை
பிரித்தானியாவில் ஒரு குறிப்பிட்ட திகதியில் அல்லது அதற்கு முன்னர் பிறந்திருந்தவர்களுக்கு கடவுச்சீட்டு இலவசமாக வழங்கப்படும்.
பிரித்தானியாவில் இருந்து வெளிநாடு செல்ல கடவுச்சீட்டு (Passport) அவசியம்.
அரசாங்க வழிகாட்டுதலின்படி, நீங்கள் ஒரு British citizen, British overseas territories citizen, British overseas citizen, a British subject, British national (overseas), அல்லது பிரிட்டிஷ் பாதுகாக்கப்பட்ட நபராக இருந்தால் பிரித்தானிய பாஸ்போர்ட்டுக்கு விண்ணப்பிக்கலாம்
HM பாஸ்போர்ட் அலுவலகம் இதனை வழங்குவதற்கு பொறுப்பாக உள்ளது, மேலும் தற்போதைய சராசரி காத்திருப்பு நேரம் மூன்று வாரங்களுக்குள் முடிகிறது.
புதிய பாஸ்போர்ட் அல்லது புதுப்பிப்பு கட்டணங்கள்:
- 16 வயது மற்றும் அதற்கு மேற்பட்டோர் - £88.50 (ஓன்லைன்), £100 (காகித விண்ணப்பம்)
- 54 பக்க பாஸ்போர்ட் - £100.50 (ஆன்லைன்), £112 (காகிதம்)
- குழந்தைகள் பாஸ்போர்ட் - £57.50 (ஆன்லைன்), £69 (காகிதம்)
- அடிக்கடி பயணிக்கும் குழந்தையின் பாஸ்போர்ட் - £69.50 (ஓன்லைன்), £81 (காகிதம்)
இலவச பாஸ்போர்ட் பெறுவோர்
நீங்கள் ஒரு குறிப்பிட்ட திகதியில் அல்லது அதற்கு முன்னர் பிறந்திருந்தால், நீங்கள் இலவசமாக பாஸ்போர்ட் பெறலாம்.
அதாவது,1929 செப்டம்பர் 2 அல்லது அதற்கு முன் பிறந்தவர்கள் புதிய பாஸ்போர்ட் அல்லது புதுப்பிப்பு இலவசமாக பெறலாம்.
மேலும், Post Office Check and Send சேவையும் இலவசமாக வழங்கப்படும்.
எனினும், அவசர சேவைக்கு அல்லது அதிகப் பயண பாஸ்போர்ட் பெற கட்டணம் செலுத்த வேண்டும்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |
UK Passport, Latest UK passport fees, UK free passport