உலகின் சக்திவாய்ந்த பாஸ்போர்ட் பட்டியல்: ஒரு படி முன்னேறிய பிரித்தானியா
2026ஆம் ஆண்டுக்கான உலகின் சக்திவாய்ந்த பாஸ்போர்ட் பட்டியலில் பிரித்தானியா ஒரு படி முன்னேறியுள்ளது.
உலகின் சக்திவாய்ந்த பாஸ்போர்ட் பட்டியல்
Henley Passport Index என்னும் அமைப்பு, உலகின் சக்திவாய்ந்த பாஸ்போர்ட் பட்டியலை ஆண்டுதோறும் வெளியிட்டுவருகிறது.

ஒரு நாட்டின் பாஸ்போர்ட் மூலம் எத்தனை நாடுகளுக்கு விசா இல்லாமல் பயணிக்கலாம் என்பதன் அடிப்படையில் இந்த தரவரிசை நிர்ணயிக்கப்படுகிறது.
அவ்வகையில், 2026ஆம் ஆண்டுக்கான உலகின் சக்திவாய்ந்த பாஸ்போர்ட் பட்டியலில் இந்த ஆண்டும் சிங்கப்பூர்தான் முதலிடத்தைப் பிடித்துள்ளது.
சிங்கப்பூர் பாஸ்போர்ட் மூலம் விசா இல்லாமல் 192 நாடுகளுக்கு பயணிக்கலாம்.

இரண்டாம் இடத்தை இரண்டு நாடுகள் பகிர்ந்துகொள்கின்றன. அவை, ஜப்பானும் தென்கொரியாவும். கடந்த ஆண்டில், தென்கொரியா இரண்டாவது இடத்திலும், ஜப்பான் மூன்றாவது இடத்திலும் இருந்தது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், பட்டியலில் எட்டாவது இடத்தில் இருந்த பிரித்தானியா, ஒரு படி முன்னேறி ஏழாவது இடத்தைப் பிடித்துள்ளது.
அத்துடன், கடந்த ஆண்டு டாப் 10 நாடுகள் பட்டியலில் இடத்தைத் தவறவிட்ட அமெரிக்கா, இம்முறை பட்டியலில் 10ஆவது இடத்தைப் பிடித்துவிட்டது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |