புலம்பெயர்ந்தோருக்கு பிரித்தானியா கொடுத்த 40 மில்லியன் பவுண்டுகள்: பின்னணி
புலம்பெயர்ந்தோர், பிரித்தானியாவை விட்டு வெளியேறுவதற்காக, அவர்களுக்கு லஞ்சமாக 40 மில்லியன் பவுண்டுகள் கொடுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
புலம்பெயர்ந்தோருக்கு 40 மில்லியன் பவுண்டுகள்
புலம்பெயர்தலைக் கட்டுப்படுத்த பிரித்தானிய அரசு கடும் நடவடிக்கைகளை எடுத்துவருவது யாவரும் அறிந்ததே.

சமீப்த்தில் கூட, பிரித்தானியாவுக்குள் நுழைய முயலும் சட்டைவிரோத புலம்பெயர்வோருக்கு பின்னடைவை ஏற்படுத்தும் வகையில் பிரித்தானிய உள்துறை அலுவலகம் சமூக ஊடகமான எக்ஸில் செய்தி ஒன்றை வெளியிட்டுள்ளது.
Anyone arriving Illegally in the UK by small boat could face removal or deportation. pic.twitter.com/qTaQs9TGOv
— Home Office (@ukhomeoffice) February 2, 2026
அந்த செய்தியில், சிறுபடகுகள் மூலம் சட்டவிரோதமாக பிரித்தானியாவுக்குள் நுழைவோர், வெளியேற்றப்படுவார்கள் அல்லது நாடுகடத்தப்படுவார்கள் என குறிப்பிடப்பட்டுள்ளது.
இதற்கிடையில், புலம்பெயர்ந்தோர், பிரித்தானியாவை விட்டு வெளியேறுவதற்காக, அவர்களுக்கு லஞ்சம் கொடுக்கப்பட்டதாகவும் ஒரு தகவல் வெளியாகியுள்ளது.
2024ஆம் ஆண்டு ஜூலை மாதத்துக்கும் 2025ஆம் ஆண்டு செப்டம்பர் மாதத்துக்கும் இடையில், 11,817 புலம்பெயர்ந்தோர் தாமாக முன்வந்து பிரித்தானியாவைவிட்டு வெளியேறுவதற்காக, அவர்களுக்கு 37,779,583 பவுண்டுகள் லஞ்சமாக கொடுக்கப்பட்டுள்ளதாக GB News என்னும் ஊடகம் தெரிவித்துள்ளது.
புலம்பெயர்தல் கட்டுப்பாட்டு மையத்தின் ஆய்வுப் பிரிவு மேற்கொண்ட ஆய்வில் இந்த தகவல் தெரியவந்துள்ளதாக அந்த ஊடகம் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |