Goretti புயல்: தண்ணீருக்காக வரிசையில் நிற்கும் பிரித்தானியர்கள்
பிரித்தானியாவை துவம்சம் செய்த கோரெட்டி புயலால் பல ஆயிரம் வீடுகள் இருளில் மூழ்கியது அனைவரும் அறிந்ததே.
இந்நிலையில், புயலின் பாதிப்பால் குடிநீர் விநியோகம் பாதிக்கப்பட்டுள்ளதால் பல ஆயிரம் வீடுகளில் சொட்டுத் தண்ணீர் கூட இல்லாத நிலை உருவாகியுள்ளது.
தண்ணீருக்காக வரிசையில் நிற்கும் பிரித்தானியர்கள்
கோரெட்டி புயலால் பிரித்தானியாவின் பல பகுதிகளில் தண்ணீர் விநியோகம் பாதிக்கப்பட்டுள்ளது.

Credit: Eddie Mitchell
சசெக்ஸ் மற்றும் கென்டில் சுமார் 21,000 வீடுகளில் தண்ணீர் விநியோகம் இல்லை. அத்துடன், நிலைமை சீராக செவாய்க்கிழமை வரை ஆகலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிரித்தானிய அரசுக்கு ஏமாற்றமளிக்கும் ஒரு செய்தி... ஆயுதமாக பயன்படுத்திய புலம்பெயர்தலால் உருவாகியுள்ள சிக்கல்
கென்டிலுள்ள Hollingbourne என்னும் கிராமத்தில் அமைந்துள்ள சுமார் 4,500 வீடுகளில் ஒரு சொட்டுத் தண்ணீர் கூட வரவில்லையாம்.

Credit: Eddie Mitchell
ஆகவே, மக்கள் தண்ணீர் போத்தல்களைப் பெறுவதற்காக கார்களில் நீண்ட வரிசையில் காத்திருக்கும் காட்சிகள் ஊடகங்களில் வெளியாகியுள்ளன.
இந்நிலையில், முதியவர்கள் சிலர் தண்ணீர் பிடிக்கச் செல்லவும் முடியாமல், அவர்களுக்கு தண்ணீர் விநியோகிக்கவும் படாமல், அவர்கள் தண்ணீர் இல்லாமல் அவதியுற்று வருவதாக புகார்களும் எழுந்துள்ளன.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |