புடின் தாக்குதல் அச்சம்... Survival kitஉடன் தயாராக இருக்க பிரித்தானியர்களுக்கு எச்சரிக்கை
பிரித்தானியாவுக்கு எரிபொருள் கொண்டுவரும் முக்கிய எரிபொருள் குழாய் ஒன்றை புடின் தாக்கக்கூடும் என்ற அச்சம் உருவாகியுள்ளதைத் தொடர்ந்து, 72 மணி நேர survival kit உடன் தயாராக இருக்க பிரித்தானியர்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
புடின் தாக்குதல் அச்சம்...
பிரித்தானியாவுக்கான எரிவாயுவில் 40 சதவிகிதம், நோர்வேயிலிருந்து Langeled என்னும் 700 மைல் நீளமுள்ள, ஒரு பிரம்மாண்ட குழாய் மூலமாக பிரித்தானியாவை வந்தடைகிறது.
இந்நிலையில், சமீபத்தில் Yantar என்னும் ரஷ்ய உளவுக்கப்பல் ஒன்று வட கடலில் பிரித்தானியாவின் கடலுக்கடியில் செல்லும் ஆற்றல் கட்டமைப்பை உளவு பார்ப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
ஆகவே, பிரித்தானியாவுக்கு எரிபொருள் கொண்டு வரும் அந்த எரிவாயுக் குழாயை ரஷ்யா சேதப்படுத்தக்கூடும் என்ற அச்சம் உருவாகியுள்ளது.
ஏற்கனவே ஐரோப்பிய ஒன்றிய பாதுகாப்பு அமைப்பின் தலைவர்கள், ரஷ்ய தாக்குதல் நேரத்தில் மக்கள் தப்பி உயிர் வாழ்வதற்காக மூன்று நாட்களுக்கான survival kit ஒன்றை தயார் செய்துவைத்துக்கொள்ளுமாறு அறிவுறுத்தியுள்ளார்கள்.
அதேபோல, கேன்களில் அடைக்கப்பட்ட உணவு, மருந்து பொருட்கள், சுவிஸ் கத்திகள் முதலான அத்தியாவசிய பொருட்கள் கொண்ட survival kit ஒன்றை பிரித்தானியர்களும் தயார் செய்துவைத்துக்கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளதாக பிரித்தானிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |