காதலர் தினத்தன்று லொட்டரியில் பிரித்தானியர் ஒருவருக்கு அடித்த ஜேக்பாட்
காதலர் தினத்தன்று லொட்டரியில் பிரித்தானியர் ஒருவருக்கு ஜேக்பாட் அடித்துள்ளது.
காதலர் தினத்தன்று (பிப்ரவரி 14) நடத்தப்பட்ட EuroMillions லொட்டரியில் பிரித்தானியர் ஒருவருக்கு 65.3 மில்லியன் பவுண்டுகள் பரிசை வென்றுள்ளார்.
வெற்றி பெற்ற லொட்டரி சீட்டின் எண்:
முதன்மை எண்கள்: 04, 14, 31, 36, 38
Lucky Stars எண்கள்: 03, 10
இந்த வெற்றியாளர் 7 எண்கள் அனைத்தையும் பொருத்தியதால், மொத்தமாக 65,341,620.50 பவுண்டு பரிசு வென்றுள்ளார் என்று National Lottery ஒப்பந்த நிறுவனம் Allwyn உறுதிப்படுத்தியுள்ளது.
பிரித்தானியாவில் மேலும் 14 பேருக்கு 1 மில்லியன் பவுண்டு பரிசு
EuroMillions UK Millionaire Maker நிகழ்ச்சியில் 14 பிரித்தானியர்கள் தலா £1 மில்லியன் பரிசு பெற்றுள்ளனர்.
இந்த வெற்றியாளர்கள் அனைவரும் 180 நாட்களுக்கு உள்ளாக பரிசை கோர வேண்டும்.
பரிசு பெற்றவர்கள் பெயரை வெளிப்படுத்தியோ அல்லது அடையாளத்தை மறைத்தோ பரிசை வாங்க தெரிவு செய்யலாம்.
National Lottery இணையதளத்தின் தகவலின்படி, பிரித்தானியாவில் இன்னும் 9 Euromillions பரிசுகள் (அதிகபட்சம் £1 மில்லியன்) இன்னும் கோரப்படாமல் உள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |
EuroMillions UK Millionaire, Lottery jackpot, EuroMillions Lottery winner, Valentine's Day EuroMillions jackpot