உக்ரைனில் இராணுவ பயிற்சி வழங்க பிரித்தானியா திட்டம்
உக்ரேனிய இராணுவ வீரர்களுக்கு பிரித்தானிய இராணுவம் பயிற்சி வழங்க திட்டமிட்டுள்ளது.
உக்ரைனில் இராணுவ வீரர்களுக்கு பயிற்சி வழங்குவதற்காக பிரித்தானிய படைகளை அனுப்பும் திட்டத்தை அரசு பரிசீலித்துவருவதாக பாதுகாப்புச் செயலாளர் ஜான் ஹீலி (John Healey) தெரிவித்துள்ளார்.
பயிற்சி திட்டத்தை விரிவுபடுத்தும் முயற்சி
ஜான் ஹீலி தனது உக்ரைன் பயணத்தின் போது, உக்ரைனியப் படைகளுக்கான உள்நாட்டு பாதுகாப்புப் பயிற்சி திட்டத்தை விரிவாக்கம் செய்வது குறித்து விவாதித்தார்.
"உக்ரேனியர்கள் தங்கள் தேவைகளை எளிதாக நிறைவேற்ற உதவ வேண்டும்," என்றும், "புதிய வீரர்களை முறையாக பயிற்சி பெற்று ராணுவத்துக்கு இணைப்பதில் உதவ வேண்டும்" என்றும் அவர் கூறினார்.
2025-ஆம் ஆண்டுக்கான உதவித்திட்டம்
ஜான் ஹீலி, உக்ரைனின் பாதுகாப்புச் செயலாளர் ருஸ்டெம் உமேரோவ் உடனான சந்திப்பில், 2025ம் ஆண்டுக்கான பிரித்தானியாவின் 5 அம்ச திட்டத்தை வழங்கினார்.
இதில் கூடுதல் பயிற்சி, ஆயுதங்கள், தொழில்துறை ஆதரவு போன்றவை இடம்பெறுகின்றன.
உக்ரைனின் புதிய சிப்பாய்களை சேர்க்கும் முயற்சிகள் சவாலாக இருப்பதுடன், போராளிகளின் தன்னிச்சையான விலகல்களும் அதிகரித்துள்ளன. இதனால் உக்ரைனின் பாதுகாப்பு நிலையை மேம்படுத்த புதிய முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |
UK considers sending troops to Ukraine to train military, UK Support Ukraine