உக்ரைனில் ஆயுத உற்பத்தியை தொடங்கும் பிரித்தானியா: இரு நாட்டு பிரதிநிதிகள் பேச்சுவார்த்தை
ரஷ்யாவின் போர் தாக்குதல் தொடர்ந்து வரும் நிலையில் உக்ரைனில் ராணுவ தளவாடங்கள் உற்பத்தியை தொடங்க பிரித்தானியா திட்டமிட்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
உக்ரைனுக்கு பிரித்தானியா உதவி
ரஷ்யாவின் போர் தாக்குதலை எதிர்த்து தொடர்ந்து போராட மேற்கத்திய நாடுகளின் ஆயுத உதவி நிச்சயமாக தேவைப்படுவதாக உக்ரைன் ஜனாதிபதி ஜெலென்ஸ்கி கோரிக்கையை முன்வைத்து வருகிறார்.
இது தொடர்பாக சமீபத்தில் ஜெலென்ஸ்கி பிரித்தானியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு இருந்த நிலையில், பிரித்தானியா உக்ரைனுக்கு Harpoon கப்பல் எதிர்ப்பு ஏவுகணை மற்றும் வான் பரப்பில் இருந்து இலக்கை தாக்கக்கூடிய Storm Shadow ஏவுகணை ஆகியவற்றை வழங்குவது தொடர்பாக ஆலோசித்து வருவதாக நேற்று தகவல் வெளியாகி இருந்தது.
The #UnitedKingdom plans to start production of military equipment in #Ukraine.
— NEXTA (@nexta_tv) February 12, 2023
According to the newspaper @Telegraph, representatives of the countries are already negotiating about the launch of joint production of weapons and military equipment on the territory of Ukraine. pic.twitter.com/yRCncXSX23
மேலும் ஜனாதிபதி ஜெலென்ஸ்கியின் பாதுகாப்பு நிருபர் ஜார்ஜ் கிரில்ஸ் வழங்கிய தகவலில், நவீன உலகில் மிகப்பெரிய ஐரோப்பிய எதிர்ப்பு சக்தியுடன் உக்ரைன் போராடி வருவதாகவும், உக்ரைனிய பாதுகாப்பு வீரர்கள் பிரித்தானியாவின் புதிய ஏவுகணைகளை கிரிமியாவில் உள்ள ரஷ்ய படைகளுக்கு எதிராக பயன்படுத்த தயாராகி வருவதாகவும் குறிப்பிட்டிருந்தார்.
ராணுவ தளவாட உற்பத்தி
இந்நிலையில் உக்ரைனில் இராணுவ தளவாடங்களை உற்பத்தி செய்ய பிரித்தானியா திட்டமிட்டு வருவதாக தெரியவந்துள்ளது.
PA Wire
டெலிகிராப் பத்திரிகையில் வெளியான தகவலின் அடிப்படையில், இருநாடுகளின் பிரதிநிதிகள் இணைந்து ஏற்கனவே உக்ரைனில் ஆயுதங்கள் மற்றும் இராணுவ உபகரணங்களின் கூட்டு உற்பத்தியை தொடங்குவது பற்றி பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர் என்பது தெரியவந்துள்ளது.