கடன் வாங்கி கிரிப்டோவில் முதலீடு செய்ய தடை - பிரித்தானிய அரசு திட்டம்
பிரித்தானிய அரசு, பொதுமக்கள் கடனில் பெற்ற பணத்தை பயன்படுத்தி கிரிப்டோகரன்சிகளை வாங்கும் செயலுக்கு தடை விதிக்க திட்டமிட்டுள்ளது.
இதன் மூலம், வேகமாக வளர்ந்து வரும் டிஜிட்டல் நாணய சந்தையை கட்டுப்படுத்தப்பட உள்ளது.
Financial Conduct Authority (FCA) எனும் நாட்டு நிதி மேற்பார்வை அமைப்பு, கிரிப்டோ முதலீடுகளை கட்டுப்படுத்த புதிய விதிகளை உருவாக்கி வருகிறது.
கடந்த 2022-ல் கிரிப்டோ வாங்க கடன் பயன்படுத்தியவர்கள் 6 சதவீதம் இருந்ததென யூகோவ் சர்வே தெரிவிக்க, 2023-ல் இது 14 சதவீதமாக உயர்ந்துள்ளது.
கடனில் வாங்கப்படும் முதலீடுகள் நஷ்டமடையும் போது, பொதுமக்கள் தங்கள் சொத்துகளை இழக்கும் அபாயம் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுபோன்று மோசமான நிதி நடத்தைகள் சூதாட்டத்தை ஒத்ததாகும் என நாடாளுமன்ற குழு கண்டறிந்துள்ளது.
இந்நிலையில், ரிடெயில் முதலீட்டாளர்கள் பாதுகாப்பு மற்றும் சந்தை நம்பிக்கையை உறுதி செய்ய, சட்ட நடவடிக்கைகள் மூலம் FCA இப்போது அனைத்து கிரிப்டோ நிறுவனங்களையும் மேற்பார்வைக்கு கொண்டு வரவுள்ளது.
முக்கியமாக, கிரிப்டோ டிரேடிங் தளங்கள், இடைத்தரகர்கள் மற்றும் கிரிப்டோ கடன் நிறுவனங்களும் இதில் அடங்கும்.
பிரித்தானிய நிதியமைச்சர் ரேசல் ரீவ்ஸ் மற்றும் FCA தலைவர் நிகில் ராதி, சில தளங்களில் ஒழுங்குமுறை சலுகை அளிக்க வேண்டும் என்றும், அதே நேரத்தில் சந்தை நம்பிக்கையையும் வலுப்படுத்த வேண்டும் என்றும் தெரிவித்துள்ளனர்.
இந்த முயற்சி, நாட்டு வளர்ச்சிக்கும், நிதி நிலைத்தன்மைக்கும் வழிவகுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |
UK crypto borrowing ban, FCA crypto regulation 2024, UK cryptocurrency law, Rachel Reeves crypto policy, FCA digital asset rules, crypto purchase credit card ban, UK crypto retail investors, crypto regulation UK vs EU, Bitcoin regulation UK 2024, UK crypto legislation news