பெண்கள் குழந்தைகளிடம் அத்துமீறினால் பயங்கர தண்டனை: பிரித்தானியா திட்டம்
பெண்கள் மற்றும் குழந்தைகளிடம் அத்துமீறுவோருக்கு கடுமையான தண்டனை ஒன்றை அளிக்க பிரித்தானிய அரசு திட்டமிட்டு வருகிறது.
பெண்கள் குழந்தைகளிடம் அத்துமீறினால்...
ஆம், இனி குழந்தைகளிடம் அத்துமீறுவோர், பெண்களை வன்புணர்வோருக்கு, ரசாயனம் மூலம் ஆண்மை அகற்றம் செய்யப்படும்.
பிரித்தானிய நீதித்துறை அமைச்சரான ஷபானா மஹ்மூத் இப்படி ஒரு திட்டத்தை முன்வைத்துள்ளார்.
மேலும், பெண்கள் மற்றும் குழந்தைகளிடம் அத்துமீறுவோருக்கு ரசாயனம் மூலம் ஆண்மை அகற்றம் செய்யப்படுவதை கட்டாயமாக்கவும் ஷபானா திட்டமிட்டுவருகிறார்.
இங்கிலாந்திலும், வேல்ஸ் நாட்டிலும் உள்ள 20 சிறைகளில் இருக்கும் இத்தகைய குற்றச்செயல்களில் ஈடுபட்டவர்கள் மீது ரசாயன ஆண்மை அகற்றம், சோதனை முறையில் மேற்கொள்ளப்பட இருக்கிறது.
ஷபானா, இந்த தண்டனையை கட்டாயமாக்க விரும்பும் நிலையில், பெண்கள் குழந்தைகளிடம் அத்துமிறீயதற்காக இப்போதைக்கு சிறையிலிருக்கும் குற்றவாளிகளுக்கு மட்டுமின்றி, suspended sentences என்னும் சிறைத்தண்டனை ஒத்திவைக்கப்பட்டவர்களுக்கும் இந்த ரசாயன ஆண்மை அகற்றத்தைச் செய்யவேண்டும் என கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |