நிரந்தரக் குடியிருப்பு அனுமதி: கடுமையான விதி மாற்றங்களுக்கு தயாராகும் பிரித்தானியா
பிரித்தானியாவில் புலம்பெயர்ந்தோர் எண்ணிக்கை அதிகமாக உள்ளதற்குக் காரணம் முந்தைய கன்சர்வேட்டிவ் அரசுதான் என குற்றம் சாட்டியிருந்தார் பிரதமர் கெய்ர் ஸ்டார்மர்.
ஆனால், அவரது ஆட்சியிலேயே புலம்பெயர்ந்தோர் எண்ணிக்கை கணிசமாக உயர்ந்துள்ளதாக தற்போது குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக, சமீபத்திய தேர்தல்களில் ஸ்டார்மரின் கட்சிக்கு ஏற்பட்ட இழப்புகளைத் தொடர்ந்து அவர் மீது அதிருப்தி ஏற்பட்டுள்ளது.
விதி மாற்றங்களுக்கு தயாராகும் பிரித்தானியா
ஆகவே, புலம்பெயர்தலைக் கட்டுப்படுத்த கடும் நடவடிக்கைகள் எடுக்கப்போவதாக சூளூரைத்துள்ளார் ஸ்டார்மர்.
குறிப்பாக, புலம்பெயர்ந்தோருக்கு நிரந்தரக் குடியிருப்பு அனுமதி வழங்குவதைக் கடினமாக்க அரசு திட்டம் வைத்துள்ளதாகத் தெரிகிறது.
தற்போது, புலம்பெயர்ந்தோர் ஐந்து ஆண்டுகள் பிரித்தானியாவில் வாழ்ந்து பணி செய்யும் நிலையில், அவர்கள் நிரந்தரக் குடியிருப்பு அனுமதிக்கு விண்ணப்பிக்கலாம் என விதி உள்ளது.
பின்னர், அவர்கள் பிரித்தானிய குடியுரிமை பெற இந்த நிரந்தரக் குடியிருப்பு அனுமதி உதவியாக இருக்கும்.
ஆகவே, அதை மாற்றி, இனி, பத்து ஆண்டுகள் பிரித்தானியாவில் வாழ்ந்தால், பணி செய்தால் மட்டுமே, சில தரப்பினருக்கு நிரந்தரக் குடியிருப்பு அனுமதிக்கு விண்ணப்பிக்கமுடியும் என விதிமாற்றம் செய்யப்படலாம் என சம்பந்தப்பட்ட துறையிலுள்ள சிலர் தெரிவித்துள்ளார்கள்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |