பிரித்தானிய ராஜ குடும்பத்தில் அமெரிக்கர்களுக்கு யாரை அதிகம் பிடிக்கும்? ஆய்வு முடிவுகள்
பிரித்தானிய ராஜ குடும்பத்தில் யாரை அமெரிக்கர்களுக்கு அதிகம் பிடிக்கும் என்பதை அறிவதற்காக ஆய்வு ஒன்று மேற்கொள்ளப்பட்டது.
அமெரிக்கர்களுக்கு பிடித்த ராஜ குடும்ப உறுப்பினர் யார்?
YouGov அமைப்பு சமீபத்தில் மேற்கொண்ட ஆய்வொன்றில், இளவரசர் ஹரி அமெரிக்காவில் வாழ்ந்தாலும், அவரை விட இளவரசர் வில்லியமை அமெரிக்கர்களுக்கு அதிகம் பிடிக்கும் என்பது தெரியவந்துள்ளது.
இளவரசர் ஹரி தங்களுக்குப் பிடித்த ராஜ குடும்ப உறுப்பினர் என 56 சதவிகிதம் அமெரிக்கர்கள் தெரிவித்துள்ள நிலையில், 63 சதவிகிதம் பேர் தங்களுக்கு இளவரசர் வில்லியமை பிடிக்கும் என தெரிவித்துள்ளார்கள்.
இவர்கள் எல்லாரையும் பின்னுக்குத் தள்ளி அமெரிக்கர்கள் மனதில் அதிகம் இடம் பிடித்த பிரித்தானிய ராஜ குடும்ப உறுப்பினர், அன்றும் இன்றும், மக்களின் இளவரசி என அழைக்கப்படும் இளவரசி டயானாதான்.
டயானாதான் தங்களுக்கு பிடித்த பிரித்தானிய ராஜ குடும்ப உறுப்பினர்கள் என 76 சதவிகித அமெரிக்கர்கள் தெரிவித்துள்ளனர். மகாராணி எலிசபெத்துக்கே இரண்டாம் இடம்தான்.
ஆம், அமெரிக்கர்களுக்கு பிடித்த பிரித்தானிய ராஜ குடும்ப உறுப்பினர்கள் பட்டியலில் டயானா முதலிடம் பிடிக்க, எலிசபெத் மகாராணி 73 சதவிகித ஆதரவுடன் இரண்டாம் இடத்தைப் பிடித்துள்ளார்!
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |