இந்தியா-பிரித்தானியா இடையிலான வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த ஒப்பந்தம்
இந்தியா மற்றும் பிரித்தானியா இடையிலான பலமில்லியன் பவுண்டு மதிப்பிலான சுதந்திர வர்த்தக ஒப்பந்தம் (FTA) தற்போது இறுதியாக்கப்பட்டுள்ளது.
இரு நாடுகளும் பன்னாட்டு வர்த்தகத்தை அதிகரிக்கும் நோக்கில் இந்த முக்கிய ஒப்பந்தத்தை கையெழுத்திட்டுள்ளன.
இந்த ஒப்பந்தத்தின் மூலம், இந்தியா ஏற்றுமதிகளில் 99 சதவீத சுங்கவரிகளுக்கு வரிவிலக்கு பெறுகிறது.
இதன் மூலம் இந்தியாவிலிருந்து பிரித்தானியாவை நோக்கி வரும் தயாரிப்புகள் பெரும்பாலும் வரி இல்லாமல் நுழைய அனுமதி பெறும்.
இது இந்திய தொழில் மற்றும் சேவைத் துறைகளுக்குப் பெரும் ஆதாயமாகும்.
தகவல் தொழில்நுட்பம், கல்வி, நிதி மற்றும் தொழில்முறை சேவைகள் போன்ற துறைகளுக்கு விரிவான சந்தை வாய்ப்புகள் உருவாகும்.
மெடிக்கல் சாதனங்கள், விஸ்கி, ஆட்டு இறைச்சி மற்றும் மேம்பட்ட இயந்திரங்கள் உள்ளிட்ட பிரித்தானிய பொருட்கள் இந்தியாவில் குறைந்த வரியில் நுழைய வாய்ப்பு பெறுகின்றன. விஸ்கி மீது இருந்த 150 சதவீத வரி, படிப்படியாக 40 சதவீதத்திற்கு குறைக்கப்படும்.
Delighted to speak with my friend PM @Keir_Starmer. In a historic milestone, India and the UK have successfully concluded an ambitious and mutually beneficial Free Trade Agreement, along with a Double Contribution Convention. These landmark agreements will further deepen our…
— Narendra Modi (@narendramodi) May 6, 2025
மூன்று வருடங்கள் இந்திய தொழிலாளர்களுக்கான சமூக நல நிதி பங்களிப்பு விலக்கு வழங்கப்படும். இது, இந்திய சேவை நிறுவனங்களுக்குக் குறைந்த செலவில் பிரித்தானியாவில் பணியாற்ற வாய்ப்பை வழங்கும்.
இந்த ஒப்பந்தம் 2030-க்குள் இரு நாடுகளுக்கும் இடையிலான வர்த்தகத்தை 120 பில்லியன் டொலராக உயர்த்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |
Keywords: India UK free trade agreement, India UK FTA 2025, UK India tariff cuts, India exports duty-free UK, FTA benefits India UK, UK whisky import duty India, Modi Keir Starmer trade deal, India UK service sector trade, Indo-UK digital trade agreement, India UK skilled worker movement