போரிஸ் ஜான்சன் பதவி விலகிய பிறகும்...பிரதமராக நீடிக்கும் முடிவு: சர் ஜான் மேஜர் எச்சரிக்கை!
பிரித்தானியாவின் பிரதமர் பதவியை போரிஸ் ஜான்சன் ராஜினாமா செய்த பிறகும், இடைகால பிரதமராக போரிஸ் ஜான்சனே செயல்படுவது விவேகமற்றது மற்றும் நிலைக்க முடியாதது என பிரித்தானியாவின் முன்னாள் பிரதமர் சர் ஜான் மேஜர் எச்சரித்துள்ளார்.
பிரித்தானியாவில் போரிஸ் ஜான்சன் தலைமையிலான ஆளும் கன்சர்வேட்டிவ் கட்சியின் முக்கிய அமைச்சர்கள் அடுத்தடுத்து பதவி விலகியதை தொடர்ந்து, பிரித்தானிய பிரதமர் போரிஸ் ஜான்சனும் தனது பதவியில் இருந்து ராஜினாமா செய்வதாக வியாழன்கிழமையான இன்று அறிவித்தார்.
இது பிரித்தானிய அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கும் நிலையில், கன்சர்வேட்டிவ் கட்சி அடுத்த பிரதமரை தேர்ந்தெடுக்கும் வரை இடைகால பிரதமராக போரிஸ் ஜான்சனே தொடருவார் என்று தெரிவிக்கப்பட்டது.
Boris Johnson resigned as Britain’s Prime Minister after he was abandoned by ministers and his Conservative Party’s lawmakers https://t.co/a6NbASwT2i pic.twitter.com/nYuZHN4krR
— Reuters (@Reuters) July 7, 2022
இந்தநிலையில், பிரித்தானியாவின் முன்னாள் பிரதமர் சர் ஜான் மேஜர், டோரி 1922 கமிட்டிக்கு எழுதியுள்ள கடிதத்தில் இடைகால பிரதமராக போரிஸ் ஜான்சன் தொடருவார் என்ற தகவலுக்கு பகிரங்க எச்சரிக்கை விடுத்துள்ளார்.
சர் ஜான் மேஜரின் இந்த எச்சரிக்கை போரிஸ் ஜான்சன் ராஜினாமா செய்த பிறகும், அடுத்த கன்சர்வேட்டிவ் கட்சியின் தலைவர் தேர்ந்தெடுக்கும் வரை பிரதமராக போரிஸ் ஜான்சன் இருப்பார் என தகவல் தெரிவிக்கப்பட்டதை தொடர்ந்து வெளிவந்துள்ளது.
அதேசமயம் கன்சர்வேட்டிவ் கட்சியில் அடுத்த பிரதமர் தொடர்பான கால அட்டவணை அடுத்த வாரம் அறிவிக்கப்படும், ஆனால் அக்டோபர் வரை புதிய தலைவர் பதவிக்கு வரமாட்டார் என நம்பப்படுகிறது.
1990 முதல் 1997 வரை பிரதமராக இருந்த சர் ஜான், போரிஸ் ஜான்சன் முழுவதுமாகவே ராஜினாமா செய்யலாம் என்றும், துணைப் பிரதமர் டொமினிக் ராப் புதிய கன்சர்வேடிவ் கட்சித் தலைவர் தேர்ந்தெடுக்கப்படும் வரை நாட்டின் பொறுப்பையும் ஏற்கலாம் என்றும் பரிந்துரைத்தார்.
மேலும் இதற்கு மாற்றாக, தற்போதைய தனித்துவமான மற்றும் அழுத்தமான சூழ்நிலைகளில் புதிய தலைவரை தேர்ந்தெடுக்க எம்.பி.க்கள் குழு இணைந்து ஒருவரை தேர்ந்தெடுக்கலாம் எனவும், அதில் வெற்றி பெற்றவரை புதிய பிரதமராக நியமித்த பின்னர் கட்சி உறுப்பினர்களால் அங்கீகரிக்கலாம் எனத் தெரிவித்தார்.
ஆனால் இந்த இரண்டு விருப்பங்களும் சிறந்தவை அல்ல, இருப்பினும் எல்லாவற்றிற்கும் மேலாக நாட்டின் நலன்களுக்கு முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும் என்று அவர் மேலும் கூறினார்.
கூடுதல் செய்திகளுக்கு; போரிஸ் ஜான்சனுக்கு நன்றி: மனம் உருகிய உக்ரைனின் தலைமை அதிகாரி
அத்துடன் பிரித்தானியாவில் இடைக்காலப் பிரதமர் என்று எதுவும் இல்லை என்று கூறிய அவர், இந்தப் பிரதமருக்கு இனி புதிய விஷயங்களைச் செய்ய அரசியல் அதிகாரம் இல்லை எனவும் தெரிவித்தார்.