போரிஸ் ஜான்சனுக்கு நன்றி: மனம் உருகிய உக்ரைனின் தலைமை அதிகாரி
ரஷ்யாவின் அத்துமீறிய ராணுவ நடவடிக்கையில் உக்ரைனுக்கு முழுமனதோடு ஆதரவு அளித்த பிரித்தானிய பிரதமர் போரிஸ் ஜான்சனுக்கு உக்ரைனின் அரசின் தலைமை இராஜதந்திரி டிமிட்ரோ குலேபா வியாழன் கிழமை நன்றி தெரிவித்துள்ளார்.
பிரித்தானியாவில் ஆளும் கன்சர்வேட்டிவ் கட்சியின் முக்கிய அமைச்சர்கள் அடுத்தடுத்து பதவி விலகியதை தொடர்ந்து, பிரித்தானிய பிரதமர் போரிஸ் ஜான்சனும் வியாழன்கிழமையான இன்று, தனது பிரதமர் பதவி மற்றும் கன்சர்வேட்டிவ் கட்சியின் தலைவர் பதவி இரண்டில் இருந்தும் விலகுவதாக அறிவித்தார்.
இது பிரித்தானிய அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கும் நிலையில், ரஷ்யாவிற்கு எதிரான போர் நடவடிக்கையில் முழுமனதோடு துணை நின்றதற்காக போரிஸ் ஜான்சனுக்கு மிகவும் நன்றி என உக்ரைனின் வெளியுறவு துறை அமைச்சர் டிமிட்ரோ குலேபா தெரிவித்துள்ளார்.
இதுத் தொடர்பாக அவர் தனது சமூக வலைதள பக்கத்தில் தெரிவித்துள்ள கருத்தில், ரஷ்யா போன்ற அசுரனை பிரதிநிதித்துவப்படுத்தும் கூட்டணிகளுக்கு எதிராக, உக்ரைனுக்கு ஆதரவு அளிப்பவர்களை வழிநடத்துவது தொடர்பாக போரிஸ் ஜான்சன் எடுத்த நிலைப்பாட்டை பாராட்டியதுடன் தனது நன்றியையும் தெரிவித்தார்.
கூடுதல் செய்திகளுக்கு: போரிஸ் ஜான்சன்: பிரிட்டன் பிரதமரை பதவி விலக வைத்த 5 காரணிகள்
இதற்கு முன்னதாக உக்ரேனிய ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கியின் ஆலோசகர் மைக்கைலோ போடோலியாக், பிரித்தானியா சார்பாக நெருக்கடியால் பாதிக்கப்பட்ட உக்ரைனுக்கு உதவி வழங்கியதற்காக ஜான்சனுக்கு நன்றி எனத் தெரிவித்து இருந்தார் என்பது குறிப்பிடதக்கது.