எப்போதும் உங்களுக்கு துணை நிற்போம்: இஸ்ரேலில் பிரித்தானியா பிரதமர் ரிஷி சுனக்
இஸ்ரேல்-ஹமாஸ் படைகளுக்கு இடையே போர் நடைபெற்று வரும் சூழ்நிலையில் அமெரிக்க அதிபர் ஜோ பைடனை தொடர்ந்து பிரித்தானிய பிரதமர் ரிஷி சுனக் இஸ்ரேலுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார்.
ஜோ பைடன் விஜயம்
இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீனத்தின் ஹாமஸ் படையினருக்கு இடையே தீவிரமான சண்டை நடைபெற்று வரும் நிலையில், அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் இஸ்ரேலுக்கு விஜயம் செய்துள்ளார்.
மேலும் தன்னுடைய இந்த விஜயம் இஸ்ரேலுக்கான அமெரிக்காவின் ஆதரவை எடுத்துக் காட்டுவதாக அமைந்துள்ளது என தெரிவித்துள்ளார்.
Terror sponsors and perpetrators United against Palestine. #FreePalestine #Gaza #GazaCity #IsraelTerorrist #Biden pic.twitter.com/ToH82fkMUR
— UMAR. (@UMR8551) October 18, 2023
அத்துடன் போரினால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ள காசா பகுதியில் மனிதாபிமான உதவிகளை மேற்கொள்ள சுமார் 820 கோடி ரூபாயை அமெரிக்கா வழங்குவதாக அறிவித்துள்ளார்.
இஸ்ரேலில் ரிஷி சுனக்
இந்நிலையில் ஹமாஸுக்கு எதிரான போரில் இஸ்ரேலுக்கு ஆதரவு தெரிவிக்கும் விதமாக பிரித்தானிய பிரதமர் ரிஷி சுனக் இஸ்ரேலுக்கு இன்று சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார்.
இது தொடர்பாக எக்ஸ் தளத்தில் பிரித்தானிய பிரதமர் ரிஷி சுனக் வெளியிட்டுள்ள பதிவில், தூக்கத்தில் இருக்கும் நாடான இஸ்ரேலில் நான் இருக்கிறேன்.
The Prime Minister has arrived in Israel for meetings with leaders in the country, as well as the wider region.
— UK Prime Minister (@10DowningStreet) October 19, 2023
The UK is working to ensure Hamas’ terrorism is not a catalyst for further escalation.
All efforts must be made to prevent further loss of innocent lives. https://t.co/y16qUOYkBE
நான் உங்களுடன் சேர்ந்து வருந்துகிறேன், அத்துடன் தீவிரவாதம் என்ற தீமைக்கு எதிராக இப்போது எப்போதும் உங்களுடன் நிற்பேன் எனத் தெரிவித்துள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |