ரஷ்யாவை தாக்க உக்ரைனை அனுமதிக்க முடியாது! பிரித்தானிய பிரதமர் கெய்ர் ஸ்டார்மர் விளக்கம்
உக்ரைன் தங்களை தற்காத்து கொள்ள முழு உரிமை இருப்பதாக பிரித்தானிய பிரதமர் கெய்ர் ஸ்டார்மர் கருத்து தெரிவித்துள்ளார்.
புடின் எச்சரிக்கை
சமீபத்தில் அமெரிக்கா, பிரித்தானியாவுடன் உக்ரைனிய அமைச்சர்கள் திடீர் சந்திப்பு ஒன்றை நடத்தினர், இது ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடினுக்கு மிகுந்த கோபத்தை கிளப்பியது.
மேலும் அந்த சந்திப்பில் ரஷ்யாவின் உட்பகுதிக்குள் உக்ரைன் நீண்ட தூர ஏவுகணையை பயன்படுத்தி தாக்குதல் நடத்த பிரித்தானியா மற்றும் பிற மேற்கத்திய நாடுகள் அனுமதி அளிப்பது குறித்து முக்கிய விவாதம் மேற்கொள்ளப்பட்டது.
இந்நிலையில், ரஷ்யாவிற்குள் தாக்குதல் நடத்த பிரித்தானியா உட்பட மேற்கத்திய நாடுகள் உக்ரைனுக்கு அனுமதியளிக்குமானால் அது போரின் போக்கை மாற்றி விடும் என புடின் எச்சரித்தார்.
பிரித்தானிய பிரதமர் பதில்
ரஷ்ய பிரதமர் விளாடிமிர் புடினின் எச்சரிக்கையை தொடர்ந்து அது தொடர்பாக பதிலளித்துள்ள பிரித்தானிய பிரதமர் கெய்ர் ஸ்டார்மர் உக்ரைன் தங்களை தற்காத்து கொள்ள முழு உரிமை இருப்பதாக தெரிவித்துள்ளார்.
மேலும் மேற்கத்திய ஆயுதங்களை பயன்படுத்தி ரஷ்யாவின் உட்பகுதிக்குள் ஆழமான தாக்குதல்கள் நடத்த உக்ரைன் அனுமதிக்கப்பட மாட்டாது என தெளிவுபடுத்தினார்.
British Prime Minister Keir Starmer has said that Ukraine has the right to self-defense, but made it clear that Kiev will not yet be allowed to use Western missiles to strike deep into Russia
— NEXTA (@nexta_tv) September 13, 2024
"We are not seeking any conflict with Russia, it is not part of our intentions in the… pic.twitter.com/yFOS2Ki7LE
அத்துடன் ரஷ்யாவுடன் எத்தகைய மோதலையும் நாங்கள் விரும்பவில்லை, அது எங்கள் நோக்கங்களின் ஒரு பகுதி அல்ல என்றும் பிரித்தானிய பிரதமர் கெய்ர் ஸ்டார்மர் விளக்கியுள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |