மத்திய கிழக்கில் அதிகரிக்கும் பதற்றம்: பிரித்தானிய பிரதமர் சர் கெய்ர் ஸ்டார்மர் ஈரானுடன் பேச்சுவார்த்தை!
பிரித்தானிய பிரதமர் சர் கெய்ர் ஸ்டார்மர் ஈரானிய ஜனாதிபதி உடன் முக்கிய பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார்.
பிரித்தானிய பிரதமர் அழைப்பு
மத்திய கிழக்கில் ஈரானுக்கும், இஸ்ரேலுக்கும் இடையில் ஏற்பட்டுள்ள பதற்றமான போர்ச் சூழலுக்கு மத்தியில், ஈரானிய ஜனாதிபதி உடன் பிரித்தானிய பிரதமர் சர் கெய்ர் ஸ்டார்மர் சர்வதேச பதற்றத்தை குறைப்பது குறித்து முக்கிய பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார்.
Masoud Pezeshkian உடன் 30 நிமிடங்கள் நடைபெற்ற தொலைபேசி உரையாடலுக்கு பிறகு, திங்கட்கிழமை பிரான்ஸ், அமெரிக்கா, மற்றும் ஜேர்மனி ஆகிய நாடுகள் இணைந்து வெளியிட்ட கூட்டறிக்கையில், காசாவில் போர்நிறுத்தம் மற்றும் பணயக் கைதிகள் விடுவிப்பு ஆகியவற்றிற்கான வாய்ப்பை பாதிக்க வேண்டாம் என்று ஈரான் மற்றும் அதன் நட்பு நாடுகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
பிரித்தானிய பிரதமர் சர் கெய்ர் ஸ்டார்மருக்கு இந்த இரவு மிகவும் முக்கியமான இராஜதந்திரத்தின் பரபரப்பான இரவாக இருந்து இருக்கலாம் என்று ஸ்கை நியூஸ் தொலைக்காட்சியின் மத்திய கிழக்கு நிபுணர் Alistair Bunkal தெரிவித்தார்,
மேலும் எந்தவொரு பதிலடியும், பிராந்தியத்தை மிகப்பெரிய போர் சூழலுக்குள் தள்ளிவிடும் என்று ஈரானை எச்சரித்து இரூப்பதாகவும் தெரிவித்தார்.
பிரித்தானிய பிரதமர் ஈரானிய தலைவருடன் உரையாடல் நடத்துவது மிகவும் அரிதான செயலாகும் என்றும் Alistair Bunkal குறிப்பிட்டுள்ளார். இது ஈரானிய தலைநகர் தெஹ்ரானில் பிரித்தானிய தூதரகம் இருப்பதை காட்டுகிறது என்றும் தெரிவித்துள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |